Chennai LIC: அண்ணா சாலை எல்ஐசியில் தீ விபத்து… சென்னையில் பரபரப்பு!

Chennai LIC Fire Accident: சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்ஐசி நிறுவனத்தின் கட்டடத்தில் இன்று மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. மேலும், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்தில் வந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கட்டடத்தின் மேல்பகுதியில் இருக்கும் பெயர் பலகையில் தீப்பற்றியிருப்பதாக கூறப்பட்டது. தற்போது, தீயணைப்பு வீரர்களின் முயற்சியால், தீ அணைக்கப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று விடுமுறை நாள் என்பதால் கட்டடத்தில் ஆள்நடமாட்டம் இருப்பதற்கான வாய்ப்பு எனவும் கூறப்படுகிறது. விபத்து குறித்த காரணம் இதுவரை வெளிவரவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.