Leo: லியோ திரைப்படத்தில் அவரும் நடிக்கிறாராம்..ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சர்ப்ரைஸ்..!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் லியோ திரைப்படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பை பற்றி நம் அனைவர்க்கும் தெரியும். தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவே இப்படத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது. லோகேஷின் முந்தைய திரைப்படமான விக்ரமின் வெற்றியும், அவர் விஜய்யுடன் மீண்டும் இணைகிறார் என்பதுமே இந்த எதிர்பார்ப்பிற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.

இந்நிலையில் இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் மிகப்பிரமாண்டமான லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பை மின்னல் வேகத்தில் நடத்தி வருகின்றார் லோகேஷ். முதல்கட்ட படப்பிடிப்பை காஷ்மீரில் கடும் குளிருக்கு மத்தியில் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

Viduthalai: விடுதலை படத்தில் நடித்ததற்கு சூரி வாங்கிய சம்பளம்..இவ்வளவு தானா ?

சமீபத்தில் தான் காஷ்மீரில் லியோ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதனை ஒரு வீடியோவின் மூலம் படக்குழு வெளியிட்டது. இதையடுத்து சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இந்நிலையில் லியோ திரைப்படம் LCU வா இல்லையா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகின்றது.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

ஒரு சிலர் இது ஒரு புது கதை என்கின்றனர், மற்றும் சிலர் லியோ கண்டிப்பாக LCU தான் என்கின்றனர். ஆனால் உண்மை என்ன என்பது படக்குழுவுக்கு மட்டுமே தெரிந்தே விஷயமாகும். இதைத்தொடர்ந்து ரசிகர்களுக்கு இருக்கும் மற்றுமொரு மிகப்பெரிய கேள்வி என்னவென்றால் லியோ திரைப்படத்தில் உலகநாயகன்
கமல்ஹாசன்
நடிக்கிறாரா ? இல்லையா ? என்பதுதான்.

இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியதிலிருந்தே கமல் கெஸ்ட் ரோலில் நடிக்கின்றார் என்ற தகவல் இணையத்தில் பரவி வந்தன.ஆனால் இதைப்பற்றி எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் தற்போது வந்த தகவலின் படி சென்னையில் நடக்கும் லியோ படப்பிடிப்பில் கமல் கலந்துகொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எப்படி விக்ரம் படத்தில் சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் வந்து மிரட்டினாரா அதே போல லியோ திரைப்படத்தில் விக்ரமாகவே கமல் நடிக்கிறாராம். இது எந்த அளவிற்க்கு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால் இது ஒரு வேளை நடந்துவிட்டால் அது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.