கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்காக பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் ஆச்சரியமான பெயர்கள் இடம்பெறும் – பசவராஜ் பொம்மை!

கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்காக பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் ஆச்சரியமான பெயர்கள் இடம் பெறும் என அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சில தொகுதிகளில் புதிய முறையில் சோதனை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்நிலையில், கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி என அக்கட்சியின் மாநிலத் தலைவர் நளின்குமார் கட்டீல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பா.ஜனதாவின் 100 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியானது. ஆனால் இந்தப் பட்டியல் போலி என்று கூறி கர்நாடக பாஜக நிராகரித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.