‘நீரெல்லாம் ஒரு தலைவர்.!’ – வாயை கொடுத்து மாட்டிக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி.!

நங்கநல்லூரில் குளத்தில் மூழ்கி 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி தவறான தகவலை பேசியதாக விமர்சனம் எழுந்துள்ளது.

பங்குனி உத்திர திருவிழா

சென்னையில் நங்கநல்லூர் அருகே உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன் படி, பங்குனி உத்திர திருவிழா தீர்த்தவாரி நிகழ்ச்சி இன்று(ஏப்ரல் 05) முவசரன்பேட்டை குளத்தில் நடைபெற்றது.

இந்த குளத்தில் கோயில் தீர்த்தவாரியின் போது சுவாமி சிலையையும் சில அர்ச்சனை பொருட்களையும் நீரில் மூழ்கி எடுக்க அர்ச்சகர்கள் 25 பேர் குளத்தில் இறங்கினர். அப்போது அவர்கள் 2 முறை சுவாமி சிலையையும் அர்ச்சனை பொருட்களையும் மூழ்க வைத்து அவர்களும் மூழ்கினர்.

5 பேர் உயிரிழப்பு

அப்போது எதிர்பாராதவிதமாக ஒருவர் மூழ்க, அவரை காப்பாற்ற அடுத்தடுத்து சென்ற 5 பேர் மூழ்கி உயிரிழந்தனர். நீரில் மூழ்கி உயிரிழந்த , 5 பேரின் உடலை தீயணைப்பு படையினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

போலீஸ் கமிஷனர் ஆய்வு

ஐந்து அர்ச்சகர்கள் இறந்தது குறித்து பேசிய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ‘‘அர்ச்சகர்கள் தீர்த்தவாரி நிகழ்ச்சியின்போது குளத்தில் மூழ்கி எழுந்த சமயத்தில் ஒருவர் விழுந்தபோது மற்றவர் உதவ முற்பட, அவர்களும் உள்ளே விழுந்துள்ளனர் என்று தெரியவருகிறது. குளம் எவ்வளவு ஆழம்? இவர்கள் எப்படி தவறி விழுந்தனர்? என்று விசாரித்து வருகிறோம். தற்போது ஐந்து நபர்கள் இறந்துள்ளனர். வேறு யாரும் உள்ளே சிக்கியுள்ளார்களா என்றும் தேடிவருகிறோம். இறந்தவர்கள் 18 முதல் 25 வயதுள்ள நபர்கள்.

மேலும், ஐந்து நபர்கள் இறந்த குளம் கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமான குளம் இல்லை என்றும் பஞ்சாயத்துக்கு சொந்தமான குளம் என்பதால், குளத்தின் பராமரிப்பு குறித்தும் விசாரணை நடைபெற்றுவருகிறது’’ என்றார் அவர்.

நிவாரணம்

பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நிவாரணம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘‘இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும் உறவினர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களின் குடும்பத்திற்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் இந்த சம்பவம் குறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறிய கருத்து இப்போது பேசுபொருளாகியுள்ளது. இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘‘சென்னை நங்கநல்லூரில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின் போது 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். அறநிலையத் துறையின் அலட்சியத்தாலும் மெத்தனத்தாலுமே இத்தகைய அசம்பாவிதங்கள் கோவில் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து நடைபெறுகிறது.

எடப்பாடியின் கருத்து

உயிரிழந்த 5 அர்ச்சகர்களுமே 15 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்ட இளவயதினர் என்பது மேலும் வருந்தத்தக்கது. இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடைபெறாமல் இருக்க மிகுந்த கவனத்துடன் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன்’’ என்று அவர் தெரிவித்தார்.

இது கூட தெரியலையா.?

ஆனால் இந்த கோயில் அறநிலையத்துறையின் கீழ் வராது என்பதை நெட்டிசன்கள் ஆதாரத்துடன் விளக்கி அவருக்கு ரிட்விட் செய்து வருகின்றனர். முதலமைச்சராக இருந்தவருக்கு இந்த செய்தி கூட தெரியாதது அவருடைய அறியாமையை காட்டுவதாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.