PS 2: பொன்னியின் செல்வன் 2 முதல் விமர்சனம்… டிவிட்டர் பிரபலத்தை பொளந்து கட்டிய நெட்டிசன்கள்!

சென்னை: மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வரும் 28ம் தேதி ரிலீஸாகிறது.

பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பர் 30ம் தேதி வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது.

இதனால், இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் விமர்சனத்தை டிவிட்டர் பிரபலம் ஒருவர் வெளியிட்டது வைரலாகி வருகிறது.

பொன்னியின் செல்வன் 2 முதல் விமர்சனம்

மணிரத்னம் தனது கனவு படைப்பான பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கியுள்ளார். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தை லைகா மிகப் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் இறுதியில் வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம் சூப்பர் ஹிட்டானது.

இதனையடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வரும் 28ம் தேதி வெளியாகவுள்ளது. பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர், பாடல்கள் வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்னர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விரைவில் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளை தொடங்க பொன்னியின் செல்வன் படக்குழு ரெடியாகவுள்ளது.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் விமர்சனம் குறித்து உமைர் சந்து ட்வீட் செய்துள்ளார். சினிமா பிரபலங்கள் குறித்த தவறான தகவல்களை தனது டிவிட்டரில் வெளியிட்டு பிரபலமானவர் தான் இந்த உமைர் சந்து. பெயருக்கு ஏற்றபடி, அடிக்கடி தவறான அப்டேட்களை கொடுத்து முட்டு சந்தில் வைத்து நெட்டிசன்களால் பொளக்கப்பட்டும் வருகிறார்.

 PS 2: Netizens are blasting Umair Sandhu for tweeting the first review of Ponniyin Selvan 2

இப்போது பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் விமர்சனம் என டிவீட் செய்து, நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டு வருகிறார். தனது டிவிட்டரில் “பொன்னியின் செல்வன் 2 கண்டிப்பாக பெரிய தோல்விதான், சில தகவல்கள் கிடைத்துள்ளதாக” ட்வீட் செய்துள்ளார். அதாவது சென்சார் காப்பியில் பொன்னியின் செல்வன் 2 முதல் விமர்சனம் வந்துவிட்டதாகவும், அதன் அடிப்படையில் தான் இந்த டிவிட் எனவும் அவர் மறைமுகமாக கூறியுள்ளார்.

 PS 2: Netizens are blasting Umair Sandhu for tweeting the first review of Ponniyin Selvan 2

இதனைப் பார்த்த நெட்டிசன்கள், உமைர் சந்துவை விளாசி வருகின்றனர். இன்னும் படம் சென்சாருக்கு செல்லவில்லை எனவும், இப்படி உருட்ட வேண்டாம் என்றும் கமெண்ட்ஸ் செய்துள்ளனர். மேலும், முதல் பாகத்தை போலவே பொன்னியின் செல்வன் 2-வும் மிகப் பெரிய வெற்றிப் பெறும், அதை பொறுத்திருந்து பார்த்தால் தெரியும் எனவும் நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.

அதேபோல், இன்னும் சிலர் உமைர் சந்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஏற்கனவே முதல் பாகம் வெளியாகும் போதும் இப்படித்தான் ஏடாகூடமாக ட்வீட் செய்திருந்தார். அப்போது மணிரத்னத்தின் மனைவி சுஹாசினி உமைர் சந்துவை டிவிட்டரிலேயே லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கியிருந்தார். ஆனால், அடங்காத உமைர் சந்து மீண்டும் பொன்னியின் செல்வன் 2 குறித்து ட்வீட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.