HBChiyaanVikram: ஹேட்டர்ஸே இல்லா நடிகர் விக்ரம்: பிறந்தநாள் வாழ்த்துக்கள் சீயான்

ஏப்ரல் 14 முதல் 17 வரையிலான பிளாக்பஸ்டர் Value Days- வீடு, சமையலறை மற்றும் கோடைகால உபகரணங்களுக்கான அற்புதமான சலுகைகளைப் பெறுங்கள்.
Happy Birthday Vikram: சீயான் விக்ரமின் பிறந்தநாளான இன்று அவரை பற்றியே பலரும் சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

​விக்ரம்​ஹேட்டர்ஸ் இல்லா நடிகர் சீயான் விக்ரம் என்று கூறலாம். அத்தகைய சீயான் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். சீயான் விக்ரமாக இருப்பது சாதாரண விஷயம் அல்ல. அவர் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் இந்நேரம் காணாமல் போயிருப்பார்கள்.
வாழ்த்து
​சினிமா​திறமை, அழகு, நம்பிக்கையுடன் திரையுலகிற்கு வந்தார் விக்ரம். என் காதல் கண்மணி படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். அந்த படம் ஓடவில்லை. அது மட்டும் அல்ல அடுத்தடுத்து அவர் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் ஓடவில்லை. இதையடுத்து விக்ரமை ராசியில்லாதவர் என முத்திரை குத்தி ஒதுக்கியது திரையுலகம். வேறு யாருக்காவது இது நடந்திருந்தால் நொந்து போய் போங்கடா நீங்களும் உங்க சினிமாவும் என்று மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் விக்ரம் அப்படி இல்லை. நம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை.
​நடிகன்​நீ ராசியில்லாதவன் என்று யார் சொன்னாலும் அதை காதில் வாங்கவில்லை. நான் நல்ல நடிகன், என்னால் சாதிக்க முடியும் என மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டே இருந்தார். சுமார் 10 ஆண்டுகளாக போராடினார் விக்ரம். பிற நடிகர்களுக்கு டப்பிங் பேசினார். அப்பொழுது தான் பாலா என்கிற புதுமுக இயக்குநர் விக்ரமை அணுகி சேது படத்தில் நடிக்குமாறு கேட்டார்.
​சேது​உடல் எடையை வெகுவாக குறைத்து ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாற வேண்டும் என பாலா கூறியதும் நடிக்க முடியாது என்று விக்ரம் சொல்லவில்லை. இது கடவுள் கொடுத்த வாய்ப்பாக கருதி சேது படத்தில் நடித்தார். அவர் நம்பிக்கை வீண் போகவில்லை. சேது படம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார் விக்ரம். ராசியில்லாதவன் என ஒதுக்கியவர்கள் அனைவரின் கவனமும் விக்ரம் பக்கம் திரும்பியது. அதில் இருந்து அவரின் கெரியர் எங்கோ சென்றுவிட்டது.

​சீயான்​சேது படத்தில் விக்ரமை அவரின் நண்பர்கள் சீயான் என்று அழைத்தார்கள். அதுவே அவருக்கு பெயராகிவிட்டது. சேது படத்திற்கு பிறகு விக்ரம் நடித்த தில் படம் அவரின் கெரியரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. ஜெமினி, தூள், சாமி, பிதாமகன், அந்நியன் என பல வெற்றிப்படங்களை கொடுத்தார் விக்ரம்.

​பொன்னியின் செல்வன் 2​மணிரத்னத்தின் கனவுப்படமான பொன்னியின் செல்வனில் ஆதித்த கரிகாலனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதையடுத்து அவர் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் 2 படம் ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அதன் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் விக்ரம்.
​தங்கலான்​பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்துள்ளார் சீயான். ஞானவேல்ராஜா தயாரித்திருக்கும் அந்த படத்தின் சிறப்பு வீடியோவை விக்ரம் பிறந்தநாளான இன்று வெளியிட்டுள்ளனர். வீடியோவில் விக்ரமை பார்த்தால் அடையாளமே தெரியவில்லை. அந்த அளவுக்கு கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். ஆனால் அது தானே சீயானின் ஸ்பெஷலே.
பிறந்தநாள் ஸ்பெஷல்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.