Trisha Mother on Surya – சூர்யாதான் த்ரிஷாவின் கணவரா.. உண்மை என்ன தெரியுமா?.. ஓபனாக பேசிய த்ரிஷாவின் தாய்

சென்னை: Trisha Mother Explain About Surya (ஏ.எல்.சூர்யா பற்றி த்ரிஷாவின் தாய் விளக்கம்): த்ரிஷாதான் எனது மனைவி அவருக்கு விரைவில் என்னுடன் திருமணம் நடைபெறவிருக்கிறது என ஏ.எல்.சூர்யா என்பவர் தொடர்ந்து யூ ட்யூப் சேனல்களின் பேட்டியில் பேசிவருவது தொடர்பாக நடிகை த்ரிஷாவின் தாயார் உமா முதல்முறையாக தனது மௌனத்தை கலைத்திருக்கிறார்.

மிஸ் சென்னை பட்டம் வென்றதன் மூலமாக பிரபலமானவர் த்ரிஷா. அதனையடுத்து ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக ஒரு சில சீன்களில் தலை காட்டியவர் லேசா லேசா படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட்டானார். ஆனால் அந்தப் படம் வெளியாவதற்குள் மௌனம் பேசியதே படத்தில் கமிட்டாகிவிட்டார் த்ரிஷா. எனவே அவர் கமிட்டான முதல் படம் லேசா லேசா ஆனால் முதலில் ரிலீஸான படம் மௌனம் பேசியதே.

தனியாவா பேசலாமே: அமீர் இயக்கிய மௌனம் பேசியதே படத்தில் தனது நடிப்பின் மூலம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் த்ரிஷா. குறிப்பாக சூர்யாவிடம், தனியாவா பேசலாமே என அவர் சொல்வது ரசிகர்களின் மொபைலில் பல வருடங்களுக்கு இருந்தது. மௌனம் பேசியதே படத்துக்கு பிறகு தொடர்ந்து வெளியான படங்கள் ஹிட்டடிக்க முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

கனவுக்கன்னி த்ரிஷா: அதனையடுத்து விஜய், அஜித், சூர்யா என பலருடன் ஜோடி போட்டார். குறிப்பாக, 2004ஆம் ஆண்டு விஜய்யுடன் கில்லி படத்தில் நடித்தார். தனலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் த்ரிஷா. படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அப்படத்திலிருந்து த்ரிஷா ரசிகர்களின் மனதை கவர்ந்த கனவுக்கன்னியாக மாறினார். கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடியாகவும் விஜய் – த்ரிஷா ஜோடி மாறியது.

பல வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன்: 2002ஆம் ஆண்டிலிருந்து இப்போதுவரை தொடர்ந்து லைம் லைட்டில் இருக்கும் த்ரிஷா டாப் ஹீரோயின்களில் ஒருவராக திகழ்ந்துவருகிறார். கடந்த வருடம் பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியான சூழலில் ஏப்ரல் 28ஆம் தேதி அப்படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகவிருக்கிறது. இப்படத்தில் குந்தவையாக கலக்கியிருக்கும் த்ரிஷா அடுத்ததாக லியோ படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.

Trisha Mother Explains about A.L.Suriya Controversial Interviews

கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடி என புகழப்பட்ட விஜய் – த்ரிஷா ஜோடி ஏறத்தாழ 14 வருடங்களுக்கு பிறகு திரையில் மீண்டும் சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு இருக்கின்றனர்.

த்ரிஷாதான் என் மனைவி: த்ரிஷாவின் கிராஃப் இப்படி சீராக சென்றுக்கொண்டிருக்கும் சூழலில் ஏ.எல்.சூர்யா என்பவர் கொடுக்கும் பேட்டிகளில் ஒரு விஷயத்தை பற்ற வைத்துக்கொண்டே இருக்கிறார். அதாவது, யோ படத்திலிருந்து த்ரிஷாவை வெளியேற்ற வேண்டும். ஏனென்றால் நான் அவரை காதலித்துவருகிறேன்.

Trisha Mother Explains about A.L.Suriya Controversial Interviews

எனக்கும் த்ரிஷாவுக்கும் நவம்பர் மாதம் திருமணம் நடைபெறவிருக்கிறது. விஜய்க்கு என் மீது பெரிய பொறாமை இருக்கிறது. நானும் த்ரிஷா மீது கடும் கோபத்தில் இருக்கிறேன். நாங்கள் அடிக்கடி தொலைபேசியில் பேசிக்கொள்வோம். இப்போது எங்களுக்குள் சின்ன சண்டை என்பதால் நாங்கள் பேசிக்கொள்வதில்லை என கூறுகிறார்.

த்ரிஷா தரப்பு அமைதி: தாய் விளக்கம்: சூர்யா அவ்வாறு தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் த்ரிஷா தரப்பிலிருந்து எந்த எதிர்ப்போ, கண்டனமோ வரவில்லை. சூழல் இப்படி இருக்க சூர்யா பேசிவருவது தொடர்பாக த்ரிஷாவின் தாயார், “அவர் அப்படி பேசுவதை கண்டுகொள்ளாமல் சென்றுவிட வேண்டும். உண்மை என்னவென்று மக்களுக்கு தெரியும். இதில் நாம் தலையிட்டால் அந்த விஷயம் மேற்கொண்டு பரபரப்பாகும்” என கூறியிருக்கிறார். இதனை பத்திரிகையாளர் அந்தணன் பகிர்ந்திருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.