தடுப்பூசி முக்கியத்துவம் கொரோனாவுக்கு பின் அதிகரிப்பு| Vaccination importance increases after corona

புதுடில்லி,உலகம் முழுதும், குழந்தைகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசி நிலவரம் குறித்து, ‘உலக குழந்தைகளின் நிலை 2023’ என்ற ஆண்டு அறிக்கையை, யுனிசெப் எனப்படும், ஐ.நா., சர்வதேச குழந்தைகள் அவசர நிதியம் வெளியிட்டது.

அதன் விபரம்:

கொரோனா தொற்று பரவலின் போது, 2020 – 21 காலகட்டத்தில், இந்தியாவில் ஒரு தடுப்பூசி கூட போடாத குழந்தைகளின் எண்ணிக்கை 30 லட்சமாக இருந்தது. இது தற்போது 27 லட்சமாக குறைந்துள்ளது.

கொரேனா பெருந்தொற்று காலத்தின் போது, குழந்தைகளுக்கு போட வேண்டிய வழக்கமான தடுப்பூசிகள் மீதான நம்பிக்கை குறைந்தது. 55 நாடுகளில், 52 நாடுகளில் இந்த நிலை இருந்தது.

இந்தியா, சீனா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் மட்டும் தான், குழந்தைகளுக்கான தடுப்பூசி மீதான முக்கியத்துவம் உறுதியுடனும், முன்னை விட மேம்பட்டும் உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.