Aishwarya Rai Daughter: ஐஸ்வர்யா ராய் மகள் தொடர்ந்த பரபரப்பு வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

கடந்த 2007 ஆம் ஆண்டு உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கும், நடிகர் அபிஷேக் பச்சன் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. ஆராத்யா பச்சன் என பெயர் சூட்டப்பட்டுள்ள இவர்களது மகளுக்கு தற்போது 12 வயதாகிறது. இவர் யூடிப் சேனல்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
ஆராத்யா தற்போது தனது பெற்றோர்களுடன் பல பொது நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா சம்பந்தமான விழாக்களில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் சில யூடிப் சேனல்கள் அவர் குறித்து அவதூறு பரப்பும் நோக்கில் அவரது உடல்நிலை குறித்து தவறான செய்திகளை வெளியிட்டு வந்தனர். இது தொடர்பாக அவதூறு பரப்பும் நோக்கில் செய்திகள் வெளியிட்ட சுமார் 10 யூடிப் சேனல்களுக்கு எதிராக ஆராத்யா சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்த வீடியோக்களை நீக்க வேண்டும் என்றும் அவதூறு பரப்பிய யூடிப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ஒரு குழந்தை குறித்த தவறான தகவல்களை பரப்புவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சட்டம் ஒருபோதும் அதனை அனுமதிக்காது என்றும் தெரிவித்துள்ளது.

Vijay: மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் விஜயண்ணா: சம்பளம் மட்டும் இத்தனை கோடியாம்..!

மேலும், சாமானியர் முதல் பிரபலங்கள் வரை யாருடைய குழந்தையாக இருந்தாலும் ஒரே போல் கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும் எனக்கூறி ஆராத்யா தொடர்பான தகவல்களை வெளியிட தடை விதித்துள்ளது நீதிமன்றம்.

அத்துடன் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட வீடியோக்களை முடக்க ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக பதிலளிக்க கூறி சம்பந்தப்பட்ட யூடிப் சேனல்களுக்கு சம்மன் அனுப்பியும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.

Leo: அதை அவர்க்கிட்டயே கேளுங்க: ‘லியோ’ படம் குறித்து திரிஷா அளித்த செம்ம பதில்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.