அட்டிக் அஹமது மனைவியை பிடிக்க உ.பி., போலீசார் தீவிரம் | Atiq Ahmeds wife, UP, police are serious

பிரயாக்ராஜ்,:உத்தர பிரதேசத்தில் கொலை செய்யப்பட்ட தாதாவாக இருந்து அரசியல்வாதியான அட்டிக் அஹமதுவின் மனைவி ஷாயிஸ்தா பர்வீனை கைது செய்யும் முயற்சியை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

இங்கு, பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.,வாக இருந்த ராஜு பால், 2005ல் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கின் முக்கிய சாட்சியான உமேஷ் பால் என்பவர் கடந்த பிப்ரவரியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில் கைதான முன்னாள் எம்.பி., அட்டிக் அஹமது, அவரின் சகோதரர் அஷ்ரப் இருவரும், 15ம் தேதி மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இது தொடர்பாக மூன்று பேரை கைது செய்து, உ.பி., போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஷாயிஸ்தா பர்வீனை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அட்டிக் அஹமது மறைவுக்குப் பின், தலைமறைவாக வாழ்ந்து வரும் இவரைப் பிடிக்க பிரயாக்ராஜ், கவுசாம்பி மாவட்டங்களில் தேடுதல் வேட்டை துரிதப்படுத்தப்பட்டுஉள்ளது.

ஷாயிஸ்தா வீடு, இவரின் உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்தி வரும் போலீசார், இவர் நடமாட்டம் குறித்து அறிய, ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.