சூடானிலிருந்து கட்டாயம் வெளியேற வேண்டும்..!உதவிக்காக காத்திருக்கும் பிரித்தானிய பிரஜைகள்


சூடானில் இருந்து வெளியேற உதவிக்காக காத்து இருப்பதாக பிரித்தானிய பிரஜைகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்

சூடானில் இராணுவத்திற்கும், துணை இராணுவத்திற்கும் இடையிலான சண்டையில் இதுவரை 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 1,800 பேர் காயமடைந்துள்ளனர் என தகவல் தெரியவந்துள்ளது.

சூடானில் 2021ல் ஆட்சிக் கவிழ்ப்பை நிகழ்த்தி அதிகாரத்தைக் கைப்பற்றிய அந்த நாட்டின் இராணுவ தலைவர் அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான்(Abdel Fattah al-Burhan) மற்றும் துணை ராணுவ விரைவு ஆதரவு படைகளுக்கு கட்டளையிடும் துணை தலைவர் முகமது ஹம்தான் டாக்லோ(Mohamed Hamdan Daglo) ஆகிய இருக்கும் இடையே ஒரு வார காலமாக அதிகாரப் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் சனிக்கிழமை அவை கொடிய வன்முறையாக வெடித்தது.

சூடானிலிருந்து கட்டாயம் வெளியேற வேண்டும்..!உதவிக்காக காத்திருக்கும் பிரித்தானிய பிரஜைகள் | Uk Nationals Make Rescue Plea From SudanSky News

இதையடுத்து இன்று சூடானில் கார்ட்டூமில் உள்ள தூதரகத்தில் இருந்து, சிக்கலான மற்றும் துரிதமான ஒரு நடவடிக்கையின் மூலமாக தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சூடானில் தற்போதைய சூழலில் தூதரக அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் இருப்பதால், வேறு வழியின்றி அவர்களை வெளியேற்றும் நிலை ஏற்பட்டு இருப்பதாக பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

சூடானிலிருந்து கட்டாயம் வெளியேற வேண்டும்..!உதவிக்காக காத்திருக்கும் பிரித்தானிய பிரஜைகள் | Uk Nationals Make Rescue Plea From SudanReuters

பிரித்தானிய பிரஜைகள் வேண்டுகோள்

இந்நிலையில் சூடானை விட்டு வெளியேற உதவிக்காக காத்து இருப்பதாக பிரித்தானிய பிரஜைகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக ஸ்கை நியூஸ் தொலைக்காட்சி-யிடம் தலைநகர் கார்ட்டூமில் வசிக்கும் பிரித்தானிய நாட்டவர் வில்லியம் பேசிய போது, நான் என் அறையில் நாற்காலியில் அமர்ந்து கொண்டு 3 கிமீ தொலைவில் நடக்கும் துப்பாக்கிச் சூட்டை பின்னணியில் கேட்டுக் கொண்டு இருக்கிறேன்.

நான் இங்கு ஆறு வருடங்களாக இருக்கிறேன், இது ஒரு அழகான இடம், இங்கு அழகான மனிதர்கள் இருக்கிறார்கள் ஆனால் இப்போது இறுதி ஆட்டம் வந்துவிட்டது.

சூடானிலிருந்து கட்டாயம் வெளியேற வேண்டும்..!உதவிக்காக காத்திருக்கும் பிரித்தானிய பிரஜைகள் | Uk Nationals Make Rescue Plea From SudanSky News

நாங்கள் வெளியேற வேண்டும் என்று உணர்கிறோம், ஆனால் எங்களை வெளியேற்றும் திட்டத்தில் எதுவும் நடக்கவில்லை என்பதால் நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம் என தெரிவித்துள்ளார்.

இது பிரித்தானிய அரசாங்கம் பின்பற்றும் அற்புதமான தந்திரமான திட்டமா என்பது எங்களுக்குத் தெரியாது மற்றும் கட்டாயம் கார்ட்டூமிலிருந்து வெளியேற வேண்டும்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.