Ayalaan: மாவீரனை தொடர்ந்து அயலான்… அதிசயங்கள் நிறைந்த புதிய உலகம்… இது சிவகார்த்திகேயன் வைப்

சென்னை: சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ திரைப்படம் தொடங்கி 5 ஆண்டுகள் ஆகிவிட்டது.

பட்ஜெட் பிரச்சினை, கிராபிக்ஸ் பணிகள் காரணமாக அயலான் படத்தின் ரிலீஸ் தாமதமாகி வந்தது.

இந்நிலையில், ரசிகர்களே எதிர்பார்க்காத வகையில் திடீரென அயலான் அப்டேட் கொடுத்து அசத்தியுள்ளது படக்குழு.

சிவகார்த்திகேயனின் மாவீரன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட மறுநாளே, அயலான் படம் குறித்தும் அல்டிமேட் அப்டேட் வெளியாகியுள்ளது

சிவகார்த்திகேயனின் அயலான் அப்டேட்
‘இன்று நேற்று நாளை’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ரவிக்குமார். தனது 2வது படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்த அவர், அயலான் படப்பிடிப்பை தொடங்கினார். சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் உருவாகும் இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைப்பாளராக கமிட் ஆனார். அயலான் மூலம் முதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் ரகுல் ப்ரீத்தி சிங், யோகி பாபு, கருணாகரன் ஆகியோர் நடித்து வருகின்றனர். அயலான் படம் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே, இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு தாறுமாறாக எகிறியது. ஆனால், பாதி படப்பிடிப்பு முடிந்த நிலையில், பட்ஜெட் பிரச்சினை காரணமாக ஷூட்டிங்கை தொடர முடியாமல் போனது.

சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான ராஜா அயலான் படத்தை தயாரித்து வந்தார். அதன்பிறகு, KJR நிறுவனம் அயலான் படத்தை கைப்பற்றியது. இதனையடுத்து வேகமாக நடைபெற்று வந்த அயலான் படப்பிடிப்பு சென்ற ஆண்டே முடிவுக்கு வந்தது. சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஏலியன்ஸாக நடித்துள்ளாராம். இதனால் கிராபிக்ஸ் பணிகளை முடிக்க அயலான் படக்குழு தீவிரமாக் உழைத்து வந்தது.

 Ayalaan: Sivakarthikeyan’s Ayalaan update will be released tomorrow morning

இந்நிலையில், அயலான் படத்தின் அப்டேட் நாளை காலை 11.04 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து KJR நிறுவனம் தனது டிவிட்டரில் அப்டேட் கொடுத்துள்ளது. அதில், அயலான் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளில் சமரசம் செய்துகொள்ளாமல் உருவாக்கியுள்ளோம். பான் இந்திய படங்களுக்கு நிகரான கிராபிக்ஸ் காட்சிகள் இதில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்தப் படத்தை கச்சிதமாக முடிக்க வேண்டும் என்பதற்காக அதிக நாட்களை எடுத்துக்கொண்டோம். இந்தப் படத்தில் வரும் வேற்றுகிரகவாசி பாத்திரம் அனைவரும் விரும்பும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், 4500 VFX காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ் ஆக்‌ஷன் திரைப்படமாக அயலான் இருக்கும் என்பதை உங்களுக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ளது.

 Ayalaan: Sivakarthikeyan’s Ayalaan update will be released tomorrow morning

பல ஹாலிவுட் படங்களுக்கு கிராபிக்ஸ் ஓர்க் செய்துள்ள Phantom FX நிறுவனத்திற்கு, அவர்களின் அளப்பரிய சிஜி பணிக்காக நன்றியை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் தொடர்ச்சியாக ஆதரவு கொடுத்து வந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள படக்குழு, ‘அயலான்’ மூலம் கற்பனைக்கு அப்பாற்பட்ட அதிசயங்கள் நிறைந்த புதிய உலகிற்கு செல்ல தயாராகுங்கள் என சப்ரைஸ் கொடுத்துள்ளது.

இதனால், நாளை காலை வெளியாகவுள்ள அயலான் படத்தின் அப்டேட்டை பார்க்க ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அயலான் படத்திற்கான கிராபிக்ஸ் பணிகள் மட்டும் தாமதமாகிக் கொண்டே இருந்த நிலையில், தற்போது அதுவும் முடிவுக்கு வந்துள்ளது உறுதியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் ஆகஸ்ட் 11ம் தேதி ரிலீஸாவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது அயலான் அப்டேட்டும் வெளியாகவுள்ளதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.