நியூசிலாந்து தீவுகளில் பயங்கர நிலநடுக்கம்… சுனாமி எச்சரிக்கை… பாதிப்புகள் என்னென்ன?

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
நியூசிலாந்து
:
உலகின் பல்வேறு நாடுகளில் நிலநடுக்கம் ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. அதில் லேட்டஸ்ட் வரவாக இணைந்திருப்பது நியூசிலாந்து. இங்குள்ள கெர்மாடெக் தீவுப் பகுதியில் இன்று (ஏப்ரல் 24) காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதாவது, பூமியின் மேற்பகுதியில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தகவல் வெளியிட்டது.

சுனாமி 18 வது ஆண்டு நினைவு தினம் – மீனவர்கள் மௌன அஞ்சலி

நியூசிலாந்தில் நிலநடுக்கம்

இது ரிக்டர் அளவுகோலில் 7.3ஆக பதிவாகியிருக்கிறது. இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படக்கூடும் என பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். உடனடியாக சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டதால் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்தில் இருந்து 300 கிலோமீட்டர் தூரம் வரை சுனாமி தாக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்காட்லாந்து: ‘ஜஸ்ட் 1.5 கோடி ரூபா இருந்தா போதும்’.. சொர்க்கத்துக்கு போகலாம்.!

சுனாமி எச்சரிக்கை

இந்நிலையில் கடலுக்கு மீன்பிடிக்க அல்லது வேறு காரணங்களுக்காக சென்றவர்கள் உடனே கரை திரும்ப தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இருப்பினும் நியூசிலாந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகள் சேதமடைந்திருப்பதாக சமூக வலைதளங்களில் சில புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

சாலைகள் சேதம்

இதன் உண்மைத் தன்மை குறித்து சரியாக ஆய்வு செய்ய வேண்டும் என்ற கருத்துகளும் பகிரப்பட்டு வருகின்றன. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டிருந்தாலும் இதுவரை அதற்கான வாய்ப்புகள் ஏதும் இல்லை என்று விஞ்ஞானிகள் பலரும் தெரிவித்துள்ளனர். எனவே பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஹவாய் பகுதியில் பாதிப்பில்லை

இதற்கிடையில் ஹவாய், பசுபிக் பிராந்தியத்தில் எந்தவித பாதிப்புகளும் இல்லை என்று பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் செய்தி வெளியிட்டுள்ளது. நிலநடுக்க அளவீடுகளை பொறுத்தவரை ரிக்டர் அளவுகோலில் 2.5 அல்லது அதற்கு குறைவாக பதிவானால் அதை நில அதிர்வு என்றே கூறுவர். இது பெரும்பாலும் உணர முடியாது.

விண்வெளி டூர்.. சாதனை முயற்சி சோதனையான கதை.. புலம்பும் எலான் மஸ்க்.!

நிலநடுக்க அளவீடுகள்

அதேசமயம் சீஸ்மோகிராப் கருவியில் பதிவாகும். 2.5 முதல் 5.4 வரை பதிவானால் லேசான நிலநடுக்கம் எனக் கூறுவர். லேசான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. 5.5 முதல் 6.0 வரை பதிவானால் கட்டடங்களில் லேசானது முதல் நடுத்தரமான பாதிப்புகள் ஏற்படும். 6.1 முதல் 6.9 வரை பதிவானால் மக்கள் நெருக்கடியான இடங்களில் அதிகப்படியான பாதிப்புகளை உண்டாக்கும்.

7.0 முதல் 7.9 வரை பதிவானால் மிகப்பெரிய நிலநடுக்கமாக கருதப்படும். மோசமான பாதிப்புகள் தென்படும். 8.0 அல்லது அதற்கு மேல் பதிவானால் மிக மிக மோசமான நிலநடுக்கம். ஒட்டுமொத்தமாக உருக்குலையும் அளவிற்கு பாதிப்பை உண்டாக்கி விடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.