Ponniyin Selvan 2: கார்த்தியை பார்த்து 'சி' வார்த்தை சொன்ன ஐஸ்வர்யா ராய்: உச்சி குளிர்ந்து போன வந்தியத்தேவன்

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
Karthi: பொன்னியின் செல்வன் 2 படத்தில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராய் பச்சன் கார்த்தியை பற்றி சொன்ன விஷயம் உண்மை தான் என்கிறார்கள் ரசிகர்கள்.

​ஐஸ்வர்யா ராய்​சீயான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் 2 படத்தை அமோகமாக விளம்பரம் செய்துவிட்டார்கள். அப்படி ஒரு விளம்பர நிகழ்ச்சியில் வந்தியத்தேவன் கார்த்தி பற்றி பேசினார் ஐஸ்வர்யா ராய் பச்சன். கார்த்தி இஸ் சார்மிங் என்றார் ஐஸ்வர்யா. அதை கேட்டு கார்த்திக்கு சந்தோஷமாகிவிட்டது.
​கார்த்தி​நான் 100 சதவீதம் ஐஸ்வர்யா ராயின் ரசிகன் என்றார் ஜெயம் ரவி. இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் தன்னை சார்மிங் என்றதுமே ஜெயம் ரவியின் கையை தட்டி பார்த்துக்கோ மச்சான் என கடுப்பேற்றினார் கார்த்தி. இதுக்கெல்லாம் நான் அசர மாட்டேனே என ஜெயம் ரவி கூலாக சிரித்துக் கொண்டே இருந்தார். ஐஸ்வர்யா ராயின் ரசிகன் என்பதில் கார்த்தி, ஜெயம் ரவிக்கு இடையே போட்டியே நடக்கிறது.

​Ponniyin Selvan 2: நரை முடி பற்றி கேட்ட செய்தியாளர்கள்: வேற மாதிரி பதில் சொன்ன ஜெயம் ரவி, சிரித்த படக்குழு

பாராட்டு
​உண்மை​கார்த்தி சார்மிங் தான். ஐஸ்வர்யா ராய் பச்சன் சொன்னது உண்மை. வந்தியத்தேவன் கதாபாத்திரத்துக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறார். கண்ணில் படும் பெண்களுக்கு எல்லாம் படத்தில் லைன் போட்டிருக்கிறார். நிஜத்தில் விளம்பர நிகழ்ச்சி நடக்கும் இடங்களில் எல்லாம் ரசிகைகளை பார்த்து உயிர் உங்களுடையது தேவி என லைன் போட்டார். அவருக்கு ஒர்க்அவுட் ஆகுது, நமக்கு மட்டும் ஏன் ஓரங்கட்டுது என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

​Trisha: பொன்னியின் செல்வன் 2 விழாவில் த்ரிஷாவை பேசவிடாமல் லியோ லியோனு கோஷமிட்ட தளபதியன்ஸ்

​பொன்னியின் செல்வன் 2​பொன்னியின் செல்வன் படம் ரூ. 500 கோடி வசூல் செய்தது. பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்களோ, இந்த படம் சூப்பர் ஃபிளாப் தான். மணிரத்னத்தால் முடியாது என்றார்கள். ஆனால் அத்தகைய விமர்சனங்களை எல்லாம் தாண்டி பொன்னியின் செல்வன் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்நிலையில் தான் பொன்னியின் செல்வன் 2 படம் நாளை ரிலீஸாகவிருக்கிறது.
​வசூல்​Ponniyin Selvan 2: பொன்னியின் செல்வன் ஏன் இவ்ளோ பெரிய ஹிட்டாச்சு?: கார்த்தி சொன்ன ரகசியம்பொன்னியின் செல்வன் பட வெற்றி பற்றி கார்த்தி கூறியதாவது, ஒரு படத்தை பார்த்து என் அம்மாவிடம் ரிசல்ட் வாங்குவது ரொம்ப கஷ்டம். அப்பாவின் சிந்து பைரவி படத்துக்கே ம்ம் என்றாங்க. அண்ணாவின் நந்தா படத்தை பார்த்துவிட்டும் ம்ம்னு சொன்னாங்க. ஆனால் முதல் முறையாக பொன்னியின் செல்வன் படத்தை பார்த்துவிட்டு யப்பா, படம் சூப்பர்பா என்றாங்க. அதனால் தான் படம் இந்த அளவுக்கு வெற்றி பெற்றது என்றார். பொன்னியின் செல்வன் 2 படம் ரூ. 1000 கோடி வசூலிக்கும் என நம்பப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.