புதுசா EB கனெக்சன் வாங்கணுமா? இதோ புது ரூல்ஸ்… டைம்க்கு வரலனா இழப்பீடு… வருகிறது ஹேப்பி நியூஸ்!

தமிழகத்தில் மின்சார உற்பத்தி மற்றும் விநியோகம் செய்யும் பொறுப்பை மாநில அரசு தன் வசம் வைத்திருக்கிறது. இதற்காக தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) என்ற அமைப்பை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. இதன் கீழ் இரண்டு விதமான துணை அமைப்புகள் இருக்கின்றன. அவை, தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் (TANTRANSCO) மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) ஆகும்.

திருச்சி – மின்சார வாரிய ஊழியர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம்

புதிய மின் இணைப்பு

புதிதாக வாடிக்கையாளர்கள் மின் இணைப்பை பெற வேண்டுமெனில், அதற்கான வசதிகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செய்து வருகிறது. தற்போது புதிய இணைப்பை பெறுவதற்கான கால அளவு 30 நாட்களாக உள்ளது. இந்த விஷயத்தில் திருத்தம் கொண்டு வர தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) முடிவு செய்துள்ளது. இதையொட்டி சில மாற்றங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

மின்சார வாரியம் ஏற்பாடு

அதன்படி, வாடிக்கையாளர்கள் புதிதாக மின் இணைப்பு வேண்டும் என்று கேட்டால் விண்ணப்பித்த 7 நாட்களில் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். அடுத்தகட்டமாக 3 நாட்களில் புதிய மின் இணைப்பை அளிக்க வகை செய்யப்படும் எனச் சொல்லப்படுகிறது. ஒருவேளை மேம்பாட்டு பணிகள் செய்ய வேண்டுமெனில் 60 நாட்கள் வரை ஆகலாம். அதுவே புதிதாக மின் விநியோக ட்ரான்ஸ்பார்கள் வசதிகளை செய்து தர வேண்டுமெனில் 90 நாட்கள் வரை ஆகும் எனத் தெரிகிறது.

மின் விநியோகம்

ஒருவேளை மின்சார வாரியம் குறிப்பிட்ட நாட்களில் மின் இணைப்பை தரவில்லை, கூடுதல் லோடு கிடைக்கவில்லை, தற்காலிக மின் விநியோக ஏற்பாடு தரவில்லை, சர்வீஸ் கனெக்‌ஷன் மாற்றம் செய்யவில்லை, மின் கட்டனத்தில் மாற்றத்தில் சிக்கல் போன்ற விஷயங்களில்
உரிய இழப்பீடு
பெற்று கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது,

GISS எனப்படும் கிரிட் இன்டராக்டிவ் சோலார் சிஸ்டம் பொறுத்துவதில் தாமதம் எனில் வாடிக்கையாளர்கள் 500 முதல் 1,000 ரூபாய் வரை இழப்பீடு வாங்கிக் கொள்ளலாம்.வாடிக்கையாளர்களின் குறைகளை சரியான முறையில் அணுகவில்லை எனில் 50 ரூபாய் இழப்பீடு வாங்க முடியும்.வாடிக்கையாளர்களின் புகார்களுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை என்றால் 25 முதல் 250 ரூபாய் வரை இழப்பீடு வாங்கலாம்.மின்சார மீட்டர்களை மாற்றம் செய்வதில் தாமதம் ஏற்பட்டால் 100 முதல் 1,000 ரூபாய் வரை இழப்பீடு பெறலாம்.பில்லிங் சம்பந்தமாக குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பதில் கிடைக்காவிட்டால் 150 ரூபாய் இழப்பீடு பெற முடியும்.

மின் மீட்டர்களில் பழுது

புதிய திருத்தங்களின் படி, தற்காலிக மின் விநியோக ஏற்பாடு 48 மணி நேரத்தில் சரிசெய்யப்பட வேண்டும். பழுதடைந்த மீட்டர்களை மாற்ற வேண்டுமெனில் 7 நாட்களுக்குள் செய்து தர வேண்டும். மீட்டர்கள் போதிய அளவில் இருப்பு இல்லை என்று கூறி ஒருபோதும் தாமதிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tangedco நடவடிக்கை

மேலும் தடையற்ற மின் சேவையை அளிக்க வேண்டியது TANGEDCO-ன் பணியாகும். ஒருவேளை 6 மணி நேரத்திற்கும் மேல் மின்சாரம் வரவில்லை, அதன்பிறகு ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கு 50 ரூபாய் வீதம் இழப்பீடு வாங்க முடியும் என்று கூறுகின்றனர். இவை அனைத்தும் அதிகாரிகளும், ஊழியர்களும் சரியான முறையில் செயல்பட்டால் மட்டுமே சாத்தியம்.

மின் ஊழியர்கள்

தற்போது கள நிலவரம் எப்படி இருக்கிறது. புதிய மின் இணைப்பிற்கு ஊழியர்கள் எந்த அளவிற்கு கிடுக்குப்பிடி போடுகின்றனர் என்பது பலரும் அறிந்த உண்மை. எனவே ஊழியர்கள் தவறு செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கவும் வழி ஏற்படுத்தி தர வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.