vijay: விஜய் ரிஸ்க் எடுக்க இதுதான் காரணமா ? அப்போ கன்பார்ம் ஹிட் தான் போலயே ..!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்

​விறுவிறுப்புலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் லியோ படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் லியோ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் சவாலான சூழ்நிலையில் நடைபெற்ற நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்புகள் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதையடுத்து மே மாதம் இறுதிக்குள் இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது

​எதிர்பார்ப்புஏற்கனவே இக்கூட்டணியில் உருவான மாஸ்டர் திரைப்படம் வெற்றி என்பதாலும், லோகேஷின் முந்தைய படமான விக்ரம் மெகாஹிட் வெற்றி என்பதாலும் லியோ படத்திற்கு உச்சகட்ட எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. குறிப்பாக இப்படம் முழுக்க முழுக்க லோகேஷின் ஸ்டைலிலேயே உருவாக இருப்பதால் ரசிகர்கள் லியோ படத்தில் விஜய்யை வேறொரு கோணத்தில் பார்க்க ஆவலாக இருக்கின்றனர். இந்நிலையில் லியோ படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பின் காரணமாகவே இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் முன்பே டிஜிட்டல் உரிமை மட்டும் பலகோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளது. மேலும் படம் வெளியான பின்னர் பல வசூல் சாதனைகளை முறியடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது

​தளபதி 68லியோ படத்தின் படப்பிடிப்பே முடிவடையாத நிலையில் விஜய் தன் அடுத்த படத்தின் அறிவிப்பை அதிரடியாக வெளியிட்டுள்ளார். முதல்முறையாக இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் விஜய் தளபதி 68 படத்தின் மூலம் இணைந்துள்ளார். மேலும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். எனவே வித்யாசமான காம்போவில் உருவாகும் தளபதி 68 திரைப்படம் தற்போதே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற இருக்கின்றது. மேலும் தளபதி 68 திரைப்படத்தை அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

​காரணம்லியோ படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் முன்பே விஜய் தன் அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டது பலருக்கும் ஆச்சர்யமாக இருக்கின்றது. ஏனென்றால் விஜய் வாரிசு படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது இப்படம் முடிவடையும் வரை லியோ படத்தின் அறிவிப்பை வெளியிட வேண்டாம் என கூறியுள்ளார். காரணம் ரசிகர்களின் கவனம் லியோ படத்தின் மீது சென்றால் அது வாரிசு படத்தை பாதிக்கும் என்ற நோக்கத்தில் விஜய் இவ்வாறு முடிவெடுத்தார். ஆனால் தற்போது லியோ படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் முன்பே தளபதி 68 அறிவிப்பை விஜய் வெளியிட காரணம் லியோ படத்தின் மீதுள்ள நம்பிக்கை தானாம். கண்டிப்பாக இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெரும் என்ற உச்சகட்ட நம்பிக்கையில் விஜய் இருப்பதால் தான் துணிந்து தளபதி 68 அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என கோலிவுட் வட்டாரத்தில் பேசி வருகின்றனர். மேலும் லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ள நிலையில் அதற்கு முன்பே தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.