சோழர்களின் செங்கோல் பாஜகவின் கையில்.. அரசியல் ஆரம்பம்.. எடுபடுமா தேசிய அரசியல்.!

புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழா தான் தற்போதைய ஹாட் டாபிக். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை வருகிற 28ம் தேதி சாவர்க்கர் பிறந்தநாள் அன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். பொதுவாக அரசியலமைப்பு சாசனத்தின் படி குடியரசு தலைவர் தான் நாடாளுமன்றத்திற்கு தலைவர் ஆவார். ஆனால் புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

பழங்குடியினர் என்பதால் நாடாளுமன்றத்தின் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட வில்லை என்பதை அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாகவும் எனவும், அதுவும் திறப்பு விழா என்பது நாடாளுமன்ற செயல்பாடுகள் மீது நம்பிக்கை இல்லாத சாவர்க்கர் பிறந்தநாளில் திறக்கப்படுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக அடிக்கல் நாட்டு விழாவிலும் அப்போதைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலித் என்பதால் அழைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது குறிப்பிடதக்கது. இந்த சூழலில் புதிய கட்டிட திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்ட எதிர்கட்சிகளில் திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், விசிக உள்ளிட்ட 19 கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

அதனால் பின்னடைவைச் சந்தித்த பாஜகவின் மூத்த தலைவர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எதிர்கட்சிகள் கலந்து கொள்ள வேண்டும் எனக் கூறியதுடன், முற்காலத்தில் மன்னர்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் போது செங்கோல் ஏந்தி நீதி வழங்குவது வழக்கம். அந்த வகையில் புதிய நாடாளுமன்ற வளாகத்தில் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் தமிழ்நாட்டின் செங்கோல் நிறுவப்படும் எனக் கூறினார் அமித்ஷா.

அதையடுத்து சோழர்களை திமுகவின் தமிழ்நாடு அரசு பெருமைபடுத்த தவறிய நிலையில், பாஜக சோழர்களை பெருமைபடுத்தியதாக பாஜகவினர் சமூகவலைதளங்களில் சமர் செய்து வருகின்றனர். இந்த செங்கோல் ஆனது பல்வேறு வரலாறுகளைக் கொண்டது. இந்தியா ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்றபோது, ஆட்சி மாற்றத்தை குறிக்கும் வகையிலான குறியீடைக் கொண்டதாக இருக்க வேண்டும் என அப்போதைய ஆளுநர் மவுண்ட் பேட்டன் மற்றும் காங்கிரஸ் தலைவர் ஜவகர்லால் நேரு ஆகியோர் விவாதித்தனர்.

இந்த சூழலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ராஜாஜி, வழமையான மரபுப்படி ஆட்சி மாற்றத்தை மேற்கொள்ளலாம் என ஐடியா கூறினார். தென் மாநிலங்கள் குறிப்பாக தமிழ்நாட்டின் மூவேந்தர்களும் ஆட்சியை கைப்பற்றினால் செங்கோல் ஏந்தி ஆட்சி அமைப்பர் என்ற குறியீட்டை ராஜாஜி கூற அதை நேரு ஏற்றுக் கொண்டார். அதன்படி மன்னர் காலத்து செங்கோல் அமைப்பிலான புதிய செங்கோல் திருவாடுதுறை ஆதின மடத்தின் உதவியால் தனியார் நகை நிறுவனத்தில் செய்யப்பட்ட செங்கோலை ஆளுநர் மவுண்ட் பேட்டன் பெற்று நேருவிடன் வழங்கி ஆட்சி மாற்றத்தை அறிவித்தார். அதேபோல் தற்போது புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட உள்ளது குறிப்பிடதக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.