Vidaamuyarchi: அஜித்துக்கு ஜோடியாகும் திரிஷா.?: 'விடாமுயற்சி' படத்தில் காத்திருக்கும் செம்ம ட்விஸ்ட்.!

‘துணிவு’ படத்தினை தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ள ‘விடாமுயற்சி’ படத்திற்காக ரசிகர்கள் பெரிதும் காத்திருக்கின்றனர். ‘ஏகே 62’ படத்தின் அறிவிப்புக்காக நீண்ட காலமாக ரசிகர்கள் வெயிட் பண்ணிய நிலையில் அண்மையில் இந்தப்படத்தின் ‘விடாமுயற்சி’ டைட்டிலுடன் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இந்தப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கவுள்ள நடிகை குறித்த தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
அஜித்தின் ‘துணிவு’ படம் கடந்த பொங்கல் வெளியீடாக ரிலீசானது. மூன்றாவது முறையாக எச். வினோத், போனி கபூர், அஜித் கூட்டணி இந்தப்படத்தில் இணைந்தனர். இந்தப்படத்தின் ஸ்டைலிஷான நெகட்டிவ் கேரக்டரில் நடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் அஜித். வங்கி கொள்ளையை மையமாக வைத்து கடந்த ஜனவரியில் வெளியான இந்தப்படம் வசூலில் மாஸ் காட்டியது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

‘துணிவு’ படத்தின் ரிலீசுக்கு முன்பாகவே அஜித்தின் ‘ஏகே 62’ படத்தின் அறிவிப்பு வெளியானது. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இந்தப்படம் உருவாகுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. திடீரென இந்தப்படத்திற்காக விக்னேஷ் சிவன் எழுதிய கதை தயாரிப்பு தரப்பிற்கு பிடிக்காமல் போனதால் அவர் ‘ஏகே 62’ படத்திலிருந்து விலகியதாக கூறப்பட்டது.

இதனையடுத்து இந்தப்படத்தை இயக்கும் வாய்ப்பை மகிழ் திருமேனி கைப்பற்றினார். ஆனால் இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த மே 1 ஆம் தேதி அஜித் பிறந்தநாளை முன்னிட்டு ‘ஏகே 62’ படத்தின் ‘விடாமுயற்சி’ டைட்டிலையும், இந்தப்படத்தை மகிழ் திருமேனி இயக்குவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் லைகா நிறுவனம் வெளியிட்டது.

Sarath Babu: சரத்பாபுவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த கமல் ஏன் வரவில்லை.?: விளக்கமளித்த சுஹாசினி.!

ஆனால் படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகைகள் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் இந்தப்படத்தில் அஜித் ஜோடியாக திரிஷா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் போன்ற படங்களில் இணைந்த நடித்த இந்த ஜோடி தற்போது நான்காவது முறையாக ‘விடாமுயற்சி’ படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு பணிகள் ஜுன் மாதம் துவங்கயிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தடையற தாக்க, மீகாமன், தடம், கலகத்தலைவன் போன்ற ஆக்ஷன் த்ரில்லர் படங்களை இயக்கிய மகிழ் திருமேனி டைரக்ஷனில் அஜித் நடிப்பது ரசிகர்கள் மத்தியில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. திரிஷா தற்போது விஜய்யுடன் ‘லியோ’ படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Aayirathil Oruvan 2: போடு வெடிய.. ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ அப்டேட் வந்தாச்சு: எகிறும் எதிர்பார்ப்பு.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.