திருவாளவனின் தளபதி: இன்னையில இருந்து 3வது நாள்.. இங்க அடிக்கிற அடி டெல்லி வரை கேக்கணும்.!

புதிய நாடாளுமன்றம் திறப்பு நாளில் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்ற விசிக அறிவுறுத்தியுள்ளது.

புதிய நாடாளுமன்றம் திறப்பு விழாதான் கடந்த இரண்டு நாட்களாக பேசு பொருளாக உள்ளது. வருகிற மே 28ம் தேதி புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். திறப்பு விழாவிற்கான தேதி நிர்ணயிக்கப்பட்டதே சர்ச்சையை தொடங்கியது. அதாவது ஆங்கிலேயர்களுக்கு பணிந்து மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து, ஊக்கத் தொகை பெற்றதாக ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களால் பேசப்பட்ட சாவர்க்கரின் பிறந்தநாளில், புதிய நாடாளுமன்றம் திறக்கப்பட உள்ளது.

அதேபோல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசு தலைவர் திரௌபதி முர்மு திறப்பு விழாவிற்கு அழைக்கப்படாததும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசியலமைப்பு படி குடியரசு தலைவர் தான் நாடாளுமன்றத்தை திறக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் அவர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் அழைக்கப்படவில்லை என கூறி நாடு முழுவதும் உள்ள 19 எதிர்கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

இந்த சூழலில் விசிகவின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு தனது ட்விட்டர் பதிவில், ‘‘புதிய நாடாளுமன்றம் திறக்கும் நாளை துக்க நாளாக அறிவித்துள்ளார் எமது தலைவர் தொல்.

. இந்த சூழலில் எடுத்த துணிச்சலான முடிவு. நாடாளுமன்ற நிகழ்வு புறக்கணிப்பில் மற்ற கட்சிகளோடு விடுதலைச்சிறுத்தைகளும் பங்கேற்பதாக அறிவித்த கையோடு, துக்க நாளாகவும் தலைவர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தந்தை பெரியார் 1947, ஆகத்து 15 அன்று அறிவிக்கப்பட்ட சுதந்திர நாளை துக்க நாளாக அறிவித்ததோடு பொருத்தி பார்க்கலாம்.

அதே போல,1776 ஆம் ஆண்டு அமெரிக்கா விடுதலையான போது, கருப்பர் இன விடுதலைப்போராளி ஃபிரெடரிக் டக்ளஸ் அவர்கள் இது கருப்பினத்துக்கான விடுதலை அல்ல என்பதை துணிச்சலாக முழங்கினார். அப்படித்தான் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவனின் இந்த அறிவிப்பும் அமைந்துள்ளது. பழங்குடி இனத்தைச்சார்ந்த திரவுபதி முர்முவை குடியரசுத்தலைவராக அறிவித்த போது பெருமை பேசிய சங்பரிவாரக்கும்பல், இப்போது புது நாடாளுமன்றத் திறப்பு விழாவில் புறக்கணிப்பது ஏன்? இதற்கான ஒரு காரணத்தைச்சொல்ல முடியுமா?

ஒரு நாடு (இந்து ராஷ்டிரம்), ஒரு மொழி (இந்தி), அது இந்து -இந்தி- இந்தியா வாக மாற்றத்துடித்த சாவர்க்கர் பிறந்த நாளில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைப்பது, புரட்சியாளர் அம்பேத்கர் கட்டமைத்த அரசியலமைப்பை தகர்க்கும் முயற்சியாகும். ஆகவே, இந்த நாளை துக்கநாளாக எல்லோரும் முன்னெடுப்பது சனாநாயகத்தை பாதுகாப்பதாக அமையும்.

ஆகவே, வரும் மே28 அன்று விடுதலைச் சிறுத்தைகளோடு இணைந்து, தமிழ்நாடு முழுக்க வீடுகளில் கருப்புக்கொடியை பறக்க விடுவது அரசியலமைப்புச்சட்டத்தை தகர்க்க நினைக்கும் சனாதனக்கும்பலுக்கு எச்சரிக்கை நடவடிக்கையாகும். ஆகவே,எல்லோரும் இந்த நாளை துக்க நாளாக அறிவிப்பதே சனாதனக்கும்பலை நிலைகுலைய வைக்க முடியும். கருப்பு கொடிகளோடு அணிவகுப்போம்! சனாதன- சங்பரிவாரக்கும்பலுக்கு எதிராக….!’’ என அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.