Bala: உயிரை பணயம் வைத்து பாலாவுக்கு கல்லீரல் தானம் செய்த நபர்: ஏன் செய்தார் தெரியுமா?

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
Bala about donor: தனக்கு கல்லீரல் தானம் கொடுத்த ஜேக்கப் ஜோசப் என்பவர் எடுத்த ரிஸ்கை பற்றி உருக்கமாக பேசியிருக்கிறார் நடிகர் பாலா.

​பாலா​இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பி பாலாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அவருக்கு கல்லீரல் பாதிப்பு இருப்பதாகவும், உடனே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். கேரள மாநிலம் கொச்சியில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட பாலாவின் உடல்நிலை மோசமானது. அவர் பிழைப்பது கடினம் என டாக்டர் தெரிவித்துவிட்டார். அதன் பிறகு டாக்டரே வியந்து போகும் வகையில் அதிசயம் நடந்து பாலா உயிர் பிழைத்தார்.பாராட்டு​விஜய்யை புகழ்ந்த மிஸ்கின்!​​அதிசயம்​தனக்கு நடந்தது பற்றி பாலா கூறியிருப்பதாவது, நான் உயிர் பிழைத்தது பெரிய அதிசயம். எல்லாம் முடிந்துவிட்டது என்று டாக்டர் கூறிவிட்டார். மருத்துவர்களை பொறுத்தவரை நான் அவ்வளவு தான். என்ன முடிவு எடுப்பது என்கிற நிலையில் இருந்தது என் குடும்பம். அவரை நிம்மதியாக சாக விடுங்கள் என்றார் டாக்டர். அடுத்த 6 மணிநேரத்தில் அதிசயம் நடந்தது. அதன் பிறகே அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தார்கள் என்றார்.

​Bala:பாலா பிழைப்பது கஷ்டம், அவரை நிம்மதியாக சாகவிடுங்கள்: கைவிரித்த டாக்டர்

​தானம்​பாலா மேலும் கூறியதாவது, ஜேக்கப் ஜோசப் என்பவர் தான் எனக்கு கல்லீரல் தானம் செய்தவர். அவரை பற்றி நான் பேசியே ஆக வேண்டும். கல்லீரலை தானம் செய்தால் உங்களுக்கும் பிரச்சனை தான் என ஜேக்கபிடம் டாக்டர் கூறினார். இடையே ஏதாவது நடந்தால் பிரச்சனை என டாக்டர் அவரை எச்சரித்திருக்கிறார். அதற்கு அவரோ பாலாவுக்காக நான் இந்த ரிஸ்கை எடுக்கிறேன் என டாக்டரிடம் கூறியிருக்கிறார்.
​நினைக்கவில்லை​ஜேக்கப் மட்டும் அல்ல அவரின் மொத்த குடும்பமும் எனக்காக ரிஸ்க் எடுக்கத் தயாராக இருந்தது. கல்லீரல் தானம் கொடுக்கும் முடிவில் மாற்றமே இல்லை என்று ஜேக்கப், அவரின் குடும்பத்தார் தெரிவித்துவிட்டார்கள்.
நான் செய்யும் தான, தர்மங்களை அவர்கள் பார்த்திருக்கிறார்கள். அவர் தானம் கொடுப்பார் என நான் கனவிலும் நினைக்கவில்லை. அறுவை சிகிச்சை முடிந்த பிறகே இது எல்லாம் எனக்கு தெரிய வந்தது என்றார் பாலா.
​ஜிம்​உடல்நலம் தேறிவிட்டதால் ஜிம்முக்கு போக ஆரம்பித்துவிட்டேன். இப்போ தான் அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. அதற்குள் ஜிம்முக்கு போகிறீர்களே என அனைவரும் சொன்னார்கள். நான் டாக்டரை பார்க்கச் சென்றபோது அவரும் அதையே தான் சொன்னார். 40 நாட்கள் தான் ஆகியிருக்கிறது. பூரணமாக குணமடைய ஆறு மாதங்கள் ஆகும். என்ன சாப்பிடுகிறீர்கள் என டாக்டர் என்னிடம் கேட்டார் என பாலா தெரிவித்தார்.

Karthi:ஆசையா படம் பார்க்க போன கார்த்தி: தியேட்டரை விட்டு விரட்டிய நிர்வாகத்தினர்
https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/do-you-know-that-karthi-was-once-kicked-out-of-a-theatre/articleshow/100518550.cms
​பிரச்சனை​மருத்துவ உலகை பொறுத்தவரை நீங்கள் ஒரு அதிசயம் பாலா என டாக்டர் கூறினார். நான் மருத்துவமனையில் இருந்தபோது கூட சிலர் எனக்கு பிரச்சனை கொடுத்திருக்கிறார்கள். எனக்கு எதிரிகள் இல்லை என சொல்ல மாட்டேன். சிலர் எனக்கு பிரச்சனை செய்திருக்கிறார்கள். நான் மருத்துவமனையில் இருந்தபோது ஒருவர் நான் எழுதுவது போன்று ஒரு கடிதம் எழுதி என் வீட்டிற்கு சென்று என் நகைகளை திருட முயற்சி செய்திருக்கிறார். நான் திரும்பி வர மாட்டேன் என நினைத்து அப்படி செய்திருக்கிறார் என பாலா கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.