திருப்பதி ஏழுமலையானுக்கு திறக்கப்பட்ட 6வது கோவில்… ஜம்மு – காஷ்மீரில் பிரமாண்டம்!

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஜம்மு – காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட கோவில் இன்று கும்பாபிஷேகம் செய்யப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

திருப்பதிஉலகப் புகழ் பெற்ற கோவில்களில் ஒன்று திருப்பதி வெங்கடாஜலபதி கோவில். ஆந்திர மாநிலம் திருப்பித மாவட்டம் திருமலையில் இந்த கோவில் அமைந்துள்ளது. திருப்பதி வெங்கடாஜலபதியை, பெருமாள், பாலாஜி, வெங்கடேச பெருமாள், சீனிவாச பெருமாள், ஏழு மலையான் என பல்வேறு பெயர்களில் அழைத்து வருகின்றனர் பக்தர்கள்.
​ திருப்பதி கோவிலில் ஆதிபுருஷ் இயக்குநரிடம் முத்தம் வாங்கிய கிரித்தி சனோன்!​திருப்பதியில் கூட்டம்சர்வதேச அளவில் பணக்கார கோவில்களில் ஒன்றாகவும் திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் காணிக்கை கூட, கோடிகளில்தான் குவிந்து வருகிறது. தற்போது கோடை விடுமுறை நிறைவடைவதை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.
​ தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன சூப்பர் தகவல்.. என்னன்னு பாருங்க!​நாடு முழுவதும்பக்தர்களின் வசதிக்காக திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன்படி திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பெருமாள் கோவில்களை திருப்பதி தேவஸ்தானம் கட்டி வருகிறது. திருப்பதிக்கு வரமுடியாத பக்தர்களின் வசதிக்காக திருப்பதி தேவஸ்தானம் இந்த பணியை மேற்கொண்டு வருகிறது.​ பலத்தை காட்ட போகிறோம்… பிராமணர்களுக்காக தனிக்கட்சி… அதிரடி காட்டும் எஸ்வி சேகர்!​
62 ஏக்கர்அந்த வகையில் ஜம்மு காஷ்மீரில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஏழுமலையானுக்கு பிரமாண்ட கோவில் கட்டப்பட்டுள்ளது. ஜம்முவின் ஷிவாலிக் வனப்பகுதியின் நடுவில் சித்ரா என்ற இடத்தில் 60 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் 32 கோடி ரூபாய் மதிப்பில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. தங்க முலாம் பூசப்பட்ட கொடி மரத்துடன் இந்த கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கோவில் ஜம்முவில் உள்ள புகழ் பெற்ற வைஷ்ணவி தேவி கோவிலுக்கு அருகே அமைந்துள்ளது.
​ பிபர்ஜாய் புயலால் ‘பேரழிவு’ யாருக்கு? வானிலையை புரட்டிப்போட போகும் முக்கியமான 3 நாட்கள்!​கோவில் திறப்புஇந்த கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இந்த கோவிலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காணொளி காட்சி மூலம் திறந்து வைத்துள்ளார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா கோவிந்தா என பரவச முழக்கமிட்டனர். ஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள இந்த கோவில் ஆந்திராவுக்கு வெளியே திருப்பதி ஏழுமலையானுக்கு கட்டப்பட்டுள்ள ஆறாவது கோவில் ஆகும்.

பெரிய கோவில்அதோடு ஜம்மு காஷ்மீரில் உள்ள மிகப்பெரிய கோவில்களில் ஒன்றாகவும் திருப்பதி தேவஸ்தானத்தின் இந்த கோவில் உள்ளது. ஏற்கனவே சென்னை, டெல்லி, புவனேஸ்வர், கன்னியாகுமரி ஹைதராபாத் ஆகிய ஐந்து இடங்களில் திருப்பதி ஏழுமலையானுக்கு கோவில்கள் உள்ளன. நாடு முழுவதும் திருப்பதி ஏழுமலையானுக்கு கோவில்கள் திறக்கப்படுவதால் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் கூட்டம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
​ மிரட்டும் பிபர்ஜாய்.. மிகத் தீவிர புயலாக வலுவடைந்தது!​ஜம்முவில் திருப்பதி​​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.