பிரச்னைகளுக்கு தீர்வுக்காணப்பட்டால் மட்டுமே ஆசிய போட்டிகளில் பங்கேற்போம் – மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக்

பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வுக்காணப்பட்டால் மட்டுமே ஆசிய விளையாட்டு போட்டிகளில் தாங்கள் பங்கேற்போம் என மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக் தெரிவித்துள்ளார்.

ஹரியானா மாநிலம் சோனிப்பட்டில் நடைபெற்ற விவசாயிகளின் மகாபஞ்சாயத்து கூட்டத்தில் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக களமிறங்கிய விவசாய சங்கத்தினரிடம்  மத்திய அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை பற்றி வீராங்கனைகள் எடுத்துரைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சாக்சி மாலிக், மன ரீதியாக தாங்கள் தினந்தோறும் சித்திரவதைகளை அனுபவித்து வருவதாகவும், அது பற்றி மற்றவர்களுக்கு புரியாது எனவும் குறிப்பிட்டார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.