IND vs WI: வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இந்திய அணிக்குள் வரும் வாசிம்-வகார் போன்ற ஜோடி

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டொமினிகாவில் ஜூலை 12ஆம் தேதி தொடங்குகிறது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்தியாவின் இரண்டு இளம் மற்றும் அபாயகரமான வேகப்பந்து வீச்சாளர்கள் அறிமுகமாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்த இளம் ஜோடி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களான வாசிம் அக்ரம் மற்றும் வக்கார் யூனிஸ் போன்று அபாயகரமாக இருப்பார்கள் என்றும் யூகிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முகமது ஷமி, முகமது சிராஜ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு அளிக்கப்படலாம். ஆசியக் கோப்பை மற்றும் 2023 உலகக் கோப்பைக்கு வருவதால் பிசிசிஐ இந்த முடிவு எடுக்க ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதன்படி, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், உம்ரான் மாலிக் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது. 

வாசிம்-வகார் போன்ற ஜோடி 

வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பெரிதும் உதவுகின்றன, அத்தகைய சூழ்நிலையில் வேகப்பந்து வீச்சாளர்களான உம்ரான் மாலிக் மற்றும் அர்ஷ்தீப் சிங் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார்கள். உம்ரான் மாலிக் தொடர்ந்து 150 கிமீ வேகத்தில் பந்துவீசுவதில் கில்லாடி. ஐபிஎல் போட்டியில் மணிக்கு 157 கிமீ வேகத்தில் பந்து வீசியவர் உம்ரான் மாலிக். வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் யார்க்கர்களை துல்லியமாக வீசுகிறார்.  இருவரும் இந்திய அணிக்காக விளையாடும்போது நிச்சயம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என கிரிக்கெட் வல்லுநர்கள் யூகித்துள்ளனர்.

* இந்தியா வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரின் போட்டிகள் (இந்திய நேரம்):

1வது டெஸ்ட், ஜூலை 12-16, டொமினிகா, இரவு 7.30

2வது டெஸ்ட், ஜூலை 20-24, இரவு 7.30, டிரினிடாட்

* இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் தொடர்

1வது ஒருநாள் போட்டி, ஜூலை 27, இரவு 7.00 மணி, பார்படாஸ்

2வது ஒருநாள் போட்டி, ஜூலை 29, இரவு 7.00 மணி, பார்படாஸ்

3வது ஒருநாள் போட்டி, ஆகஸ்ட் 1, இரவு 7.00 மணி, டிரினிடாட்

* இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர்

1வது டி20 போட்டி, ஆகஸ்ட் 3, இரவு 8.00 மணி, டிரினிடாட்

2வது டி20 போட்டி, ஆகஸ்ட் 6, இரவு 8.00 மணி, கயானா

3வது டி20 போட்டி, ஆகஸ்ட் 8, இரவு 8.00 மணி, கயானா

4வது டி20 போட்டி, ஆகஸ்ட் 12, இரவு 8.00 மணி, புளோரிடா

ஐந்தாவது டி20 போட்டி, ஆகஸ்ட் 13, இரவு 8.00, புளோரிடா

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.