ஐயா தலைவா… எவ்வளவு நாளாகிருச்சு: மாமன்னனுக்காக ஏ.ஆர். ரஹ்மானை சிலாகித்த பிரபல இயக்குனர்.!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி நடிப்பில் வெளியாகியுள்ள ‘மாமன்னன்’ படம் பல்வேறு விவாதங்களை கிளப்பி வருகிறது. ரசிகர்கள் மத்தியிலும் இந்தப்படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. அத்துடன் உதயநிதி கெரியரில் அதிகம் வசூல் செய்த படமாக பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டி வருகிறது ‘மாமன்னன்’. இந்நிலையில் இந்தப்படம் குறித்து இயக்குனர் செல்வராகவன் பகிர்ந்துள்ள ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
கடந்த வாரம் வெளியாகியுள்ள ‘மாமன்னன்’ பட தமிழ் சினிமாவில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவில் நடிகராகவும், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலமாக பல்வேறு படங்களை வினியோகித்து வந்த உதயநிதி மாமன்னனை தனது கடைசி படமாக அறிவித்துள்ளார். அமைச்சராக பதவியேற்ற பின்பு சினிமாவை விட்டு விலகி, அரசியலில் முழுவதுமாக கவனம் செலுத்த போவதாக அறிவித்தார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் கடந்த வாரம் வெளியாகியுள்ள ‘மாமன்னன்’ படம் பல்வேறு தரப்பினர்களிடம் இருந்தும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. திரையுலகை சார்ந்த பிரபலங்களும் இந்தப்படத்தை பார்த்து பாராட்டி தள்ளி வருகின்றனர். குறிப்பாக வடிவேலுவை வேறு ஒரு பரிணாமத்தில் காட்டியுள்ளதாக ‘மாமன்னன்’ படத்தை கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.

மேலும் இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள ஏ.ஆர். ரஹ்மானின் இசையும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் ‘மாமன்னன்’ படத்தின் பாடல் குறித்து இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ‘தமிழில் இப்படி ஒரு பாடல் கேட்டு எவ்வளவு நாளாயிற்று. நெஞ்சமே நெஞ்சமே. ஐயா ஏ.ஆர். ரஹ்மான் தலைவா! நாடி நரம்புக்குள் புகுந்து மயக்கும் அதிசயம். என்ன ஒரு வரிகள்’ என சிலாகித்து குறிப்பிட்டுள்ளார்.

Leo:விக்ரமில் ‘ரோலக்ஸ்’ சூர்யா.. லியோவில் யார் தெரியுமா.?: மிரளும் தளபதி ரசிகாஸ்.!

‘மாமன்னன்’ படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மானின் பாடல்களும், பின்னணி இசையும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப்படத்தின் புரமோஷன்களில் ஆர்வமாக கலந்துக்கொண்ட ரஹ்மான், படக்குழுவினருடன் கலகலப்பாக உரையாடிய வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தின. அந்தளவிற்கு ‘மாமன்னன்’ படத்திற்கு நெருக்கமான ஒருவராக ஏ.ஆர். ரஹ்மான் மாறிவிட்டார்.

‘மாமன்னன்’ படத்தின் வெற்றியை ஏ.ஆர். ரஹ்மான், மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் கேக் வெட்டி கொண்டாடினர். அத்துடன் படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மினி கூப்பர் கார் ஒன்றை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இயக்குனர் மாரி செல்வராஜுக்கு பரிசளித்தது. வசூலிலும் ‘மாமன்னன்’ படம் மாஸ் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

பிரேக்கப் ஆனதை வேறலெவலில் கொண்டாடிய ‘இரவின் நிழல்’ பட நடிகை: தீயாய் பரவும் வீடியோ.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.