Sivakarthikeyan: 'எஸ்கே 21' படத்தில் விஸ்வரூபம் நடிகரா.?: இவர் கொடூரமான ஆளாச்சே.!

சிவகார்த்திகேயன் தற்போது நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில்
கமல்
தயாரிப்பில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வருகிறது. எஸ்கே 21 படமாக உருவாகும் இந்தப்படத்தின் லுக் வெளியே தெரியாமல் இருப்பதற்காக தொப்பியுடனே வலம் வந்து கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்நிலையில் இந்தப்படம் குறித்து வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவல் சோஷியல் மீடியாவை கலக்கி வருகிறது.

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்து தற்போது டாப் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். டான்ஸ், மிமிக்ரி என சின்னத்திரை மூலம் ரசிகர்களுக்கு பரிட்சயமான இவர் தற்போது நடிகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என சினிமாவில் கொடிக்கட்டி பறந்து வருகிறார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக ‘மாவீரன்’ வெளியாகவுள்ளது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இந்தப்படம் உருவாகியுள்ளது. இவரது முதல் படமாக ‘மண்டேலா’ வெளியாகியிருந்தது. யோகி பாபு நடிப்பில் வெளியாகி விமர்சனம் மற்றும் வசூல்ரீதியாக அமோக வரவேற்பை பெற்றது இந்தப்படம்.

தனது முதல் படத்திலே ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த மடோன் அஸ்வினின் இரண்டாவது படைப்பாக ‘மாவீரன்’ உருவாகியுள்ளது. இந்தப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். மேலும், பிரபல இயக்குனர் மிஷ்கின், சரிதா, யோகி பாபு உள்ளிட்டோர் மாவீரனின் இணைந்து நடித்து வருகின்றனர். இந்தப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

ஐயா தலைவா… எவ்வளவு நாளாகிருச்சு: மாமன்னனுக்காக ஏ.ஆர். ரஹ்மானை சிலாகித்த பிரபல இயக்குனர்.!

இதனையடுத்து தான் தற்போது உலக நாயகனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘எஸ்கே 21’ படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்தப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக ‘எஸ்கே 21’ படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி ராகுல் போஸ் காஷ்மீரில் நடைபெறும் இதன் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இவர் கமலின் ‘விஸ்வரூபம்’ படத்தில் கொடூரமான வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார். இவர் தற்போது ‘எஸ்கே 21’ படத்தில் நடிப்பதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. இதனிடையில் சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படம் வரும் ஜுலை 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leo:விக்ரமில் ‘ரோலக்ஸ்’ சூர்யா.. லியோவில் யார் தெரியுமா.?: மிரளும் தளபதி ரசிகாஸ்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.