Adipurush: வெடித்த சர்ச்சை.. கை கூப்பி மன்னிப்பு கேட்ட 'ஆதிபுருஷ்' பட வசனகர்த்தா.!

அண்மையில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான படம் ‘ஆதிபுருஷ்’. பாகுபலி படத்தின் வெற்றிக்கு பிறகு பான் இந்திய ஹீரோவாகவே மாறிவிட்ட பிரபாஸ் நடிப்பில் வெளியான இந்தப்படம் ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களை குவித்தது. இந்நிலையில் இந்தப்படத்தின் வசனகர்தா மன்னிப்பு கேட்டுள்ளார்.

‘பாகுபலி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் சொல்லி கொள்ளும்படியான வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் மிகப்பெரிய பட்ஜெட்டில் ‘ஆதிபுருஷ்’ வெளியானது. ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு ஓம் ராவத் இயக்கத்தில் பான் இந்தியா படமாக ‘ஆதிபுருஷ்’ வெளியானது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்தப்படத்தில் ராமராக பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சைப் அலிகான் உள்ளிட்டோர் நடித்தனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் சுமார் 500 கோடி பட்ஜெட்டில் கடந்த மாதம் 16 ஆம் தேதி வெளியானது இந்தப்படம். இந்தப்படத்தின் டீசர் வெளியான சமயத்திலே ரசிகர்கள் கழுவி ஊற்றினார்கள்.

இதனால் படக்குழுவினர் ரிலீசை தள்ளி வைத்து கிராபிக்ஸ் காட்சிகளை மேம்படுத்தும் பணிகளில் இறங்கினர். இந்நிலையில் ஒரு வழியாக 3டி அனிமேஷன் தொழில்நுட்பத்தில் கடந்த மாதம் வெளியானது இந்தப்படம். ஆனால் படத்தை பாரதத் ரசிகர்கள் அனிமேஷன் காட்சிகள் படு மொக்கையாக இருப்பதாக விளாசி தள்ளினார்கள்.

Maamannan: மாமன்னனை விரும்பி பார்த்த முக்கிய பிரமுகர்கள்: மாரி செல்வராஜுக்கு அளித்த பரிசு.!

மேலும் சில இந்து அமைப்புகள் ராமரை இழிவுப்படுத்துவதை போல் இருப்பதாக ‘ஆதிபுருஷ்’ படத்தை தடை செய்ய கோரினார்கள். இந்தப்படத்தின் வசனங்களும் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. இந்நிலையில் இந்தப்படத்தின் வசனகர்த்தா மனோஜ் முன்டாஷிர் சுக்லா தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்டு பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், ‘ஆதிபுருஷ்’ படத்தால் மக்களின் உணர்வுகள் புண்பட்டிருப்பதை நான் ஏற்று கொள்கிறேன். இதற்காக இரு கைகளை கூப்பி நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக பதிவிட்டுள்ளார். முன்னதாக படத்தின் வசனகர்த்தாவான மனோஜ் முன்டாஷிர் சுக்லாவுக்கு தொடர் கொலை மிரட்டல்கள் வந்ததால், அவரது வீட்டிற்கு மும்பை போலீசார் பாதுகாப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Jailer: தலைவர் வேற ரகம்.. விமர்சனங்களுக்கு மத்தியில் ‘காவாலா’ பாடலை பாராட்டி தள்ளிய பிரபலம்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.