என் மீது சிறுநீர் கழித்தவரை விடுவித்து விடுங்கள்.. பழங்குடியின இளைஞர் திடீர் கோரிக்கை.. மிரட்டல் காரணமா?

போபால்:
தன் மீது சிறுநீர் கழித்த பாஜக நிர்வாகிியை விடுவித்து விடுமாறு பாதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞர் கோரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலரின் மிரட்டலுக்கு பயந்து அவர் இவ்வாறு பேசுவதாக சிலர் தெரிவிக்கின்றனர்.

மத்திய பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் பாஜக இளைஞரணி தலைவராக இருப்பவர் ப்ரவேஷ் சுக்லா. இவர் இரு தினங்களுக்கு முன்பு தனது வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது தனது வீட்டின் அருகே பைக்கை நிறுத்திய அவர், அங்கு சாலையோரம் அமர்ந்திருந்த பழங்குடியின இளைஞரான தஷ்மத் ராவத்தை நோக்கி சென்றார்.

பின்னர் அப்படியே ராவத்தின் தலையில் சிறுநீர் கழித்தார் சுக்லா. இதை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட, இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது.

காவல்துறைக்கு உத்தரவு:
மனிதாபிமானம் சிறிதும் இல்லாமல் இப்படியொரு கேவலமான காரியத்தை செய்த ப்ரவேஷ் சுக்லா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. நிலைமை கைமீறி போவதை உணர்ந்த பாஜக அரசு, அவரை கைது செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது.

கைது – வீடு இடிப்பு:
இதன்பேரில், வன்கொடுமை தடுப்புச் சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் சுக்லாவை போலீஸார் கைது செய்தனர். மேலும், அவரது வீட்டையும் மாநில அரசின் உத்தரவின்பேரில் புல்டோசர் மூலம் இடித்து தள்ளப்பட்டது. இந்நிலையில், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞர் தஷ்மத் ராவத் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

“என்னா மனுசன்”.. மனைவியை காதலனுக்கு திருமணம் செய்து கொடுத்த கணவர்.. நெகிழ்ச்சி சம்பவம்

பாவம், விட்டுவிடுங்கள்:
அப்போது அவர், “ப்ரவேஷ் சுக்லா என் மீது சிறுநீர் கழித்தது தவறுதான். அந்த தவறை அவர் உணர்ந்துவிட்டார். எனவே அவரை போலீஸார் விடுவிக்க வேண்டும். எங்கள் கிராமத்தில் உள்ள பண்டிதர் அவர். ஏதோ தெரியாமல் செய்துவிட்டார். அவரை விட்டுவிடுங்கள்” எனக் கூறினார். இதனிடையே, பாஜகவினரின் மிரட்டலுக்கு பயந்தே ராவத் இவ்வாறு பேசுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.