கால்நடை வைத்திய அதிகாரிகளின் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்குவதற்கு ஆலோசனை

கால்நடை வைத்திய அதிகாரிகளின் தீர்க்கப்படாத பணிப் பிரச்சினைகளுக்குப் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொண்டு விரைவில் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக வனவிலங்கு மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர் சட்டத்தரணி பவித்ரா வன்னியாராச்சி அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அமைச்சர் இது தொடர்பாக தெரிவிக்கையில், முன்னைய அமைச்சின் கீழ் நடாத்தப்படும் நிறுவனத்தில் பணியாற்றும் கால்நடை வைத்தியர்களின் பிரச்சனைகளை ஆராய்வதற்காக இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது காணப்படும் பதவி தொடர்பான பிரச்சினை, சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் குறித்த சிக்கல்கள் கால்நடை வைத்திய அலுவலர்களினால் அமைச்சருக்கு தெளிவுபடுத்தப்பட்டதுடன், கடமையின் தன்மை தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, கால்நடை வைத்தியர்களுக்கு ஏற்படும் மனிதாபிமான அர்ப்பணிப்பு குறித்து தான் கௌரவமளிப்பதாகவும் குறிப்பிட்டார்.

அவர்களுக்கு கிடைக்க வேண்டிய வசதிகளை திட்டமிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை வழங்கிய அமைச்சர், வெற்றிடங்களை நிரப்புவதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்குமாறும், தேவையான பதவி உயர்வுகளை முடிந்த வரை வழங்குமாறும் ஆலோசனை வழங்கினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.