Netflix புதிய அம்சம்: இனி படங்களை தேட வேண்டாம்.. அட்டகாசமான அப்டேட் இதோ

பிரபல ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃபிக்ஸ் ஆண்ட்ராய்டு மற்றும் iOS -க்கான புதிய தனிப்பயனாக்கப்பட்ட (பர்சனலைஸ்ட்) டேப்பை அறிமுகப்படுத்துவதாக திங்களன்று அறிவித்தது. “My Netflix” என்று அழைக்கப்படும் இந்த டேப், பயனர்கள் தாங்கள் பார்க்க விரும்புவதைத் தேர்வு செய்ய உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த டேப் பயனர்களின் வ்யூயிங் ஹிஸ்டரி, பதிவிறக்கங்கள் (டவுன்லோட்ஸ்) மற்றும் பிடித்த நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களின் (ஃபேஅரட் ஷோஸ் மற்றும் மூவீஸ்) அடிப்படையில் பல்வெறு நிகழ்ச்சிகளை பரிந்துரைக்கும். சமீபத்தில் சேர்க்கப்பட்ட நிகழ்ச்சிகள் மற்றும் பயனர்கள் பார்க்கும் திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கான ஷார்ட்கட்களும் இதில் அடங்கும்.

இது குறித்து நிறுவனம் கூறியது என்ன? 

இது குறித்து நிறுவனம், ‘நீங்கள் உங்கள் மொபைலுடன் சுற்றித் திரியும் போது, ​​நேராக My Netflix க்குச் செல்லுங்கள். அங்கு நீங்கள் சேமித்த அல்லது பதிவிறக்கம் செய்ததை விரைவாகத் தேர்வுசெய்யலாம்.’ என்று கூறியுள்ளது. இது தவிர, தொடர்கள் மற்றும் திரைப்படங்களின் முழுமையான பட்டியலைக் கண்டறிய பயனர்கள் ஹோம் டேப் மற்றும் செயலியின் பிற பிரிவுகளைப் பார்வையிடலாம்.

நீங்கள் விரும்பும் அனைத்தையும் பெறுவீர்கள்

பயனர்கள் Netflix உடன் அதிகமாக தொடர்புகொண்டு அவர்கள் விரும்புவதைப் பகிர்ந்தால், அவர்கள் My Netflix டேபில் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற நிகழ்ச்சிகளை அதிகமாக காண்பார்கள். இந்த மாத தொடக்கத்தில், நிறுவனம் ப்ரொபைலை டிரான்ஸ்ஃபர் அம்சத்தை அப்டேட் செய்தது. பயனர்கள் தங்கள் ப்ரொஃபைலை தற்போது இருக்கும் கணக்கில் மாற்ற நிறுவனம் இந்த அம்சத்தை புதுப்பித்தது.

ப்ரொஃபைல் டிரான்ஸ்ஃபர் அம்சம், பயனர்கள் தங்களின் தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரைகள், வியூயிங் ஹிஸ்டரி, மை லிஸ்ட், சேவ்ட் கேம்ஸ் மற்றும் பிற விருப்பத்தேர்வுகளை வேறொரு கணக்கிற்கு மாற்ற அனுமதிக்கிறது. கடந்த வாரம், ஸ்ட்ரீமிங் நிறுவனமானது இந்தியாவில் கடவுச்சொல் பகிர்வை நிறுத்திவிட்டதாகவும், தங்கள் வீடுகளுக்கு வெளியே தங்கள் கணக்குகளைப் பகிர்ந்து கொள்ளும் சந்தாதாரர்களை எச்சரிப்பதாகவும் அறிவித்தது.

ஓடிடி இயங்குதளமான நெட்ஃப்ளிக்ஸ், பயனர்களுக்கு இது தொடர்பாக ஒரு மின்னஞ்சலை அனுப்பியது. அதில், இனி பயன்ர்களின் கணக்கை அவர்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் மட்டுமே பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களது குடும்பத்திற்கு வெளியே வேறு யாரேனும் தங்கள் கணக்கைப் பயன்படுத்தினால், அவர்கள் தங்கள் ப்ரொஃபைலை புதிய கணக்கிற்கு மாற்ற வேண்டும் என்றும் (அதற்கு அவர்கள் பணம் செலுத்த வேண்டும்), அதன் பின் கடவுச்சொல்லை மாற்றுவது நல்லது என்றும் கூறப்பட்டுள்ளது.

ஸ்ட்ரீமிங் ஜாம்பவானான நெட்ஃப்ளிக்ஸ், “இன்று முதல், இந்தியாவில் தங்கள் வீட்டிற்கு வெளியே நெட்ஃப்ளிக்ஸைப் பகிரும் உறுப்பினர்களுக்கு இந்த மின்னஞ்சலை அனுப்புவோம். நெட்ஃப்ளிக்ஸ் கணக்கு ஒரு குடும்பத்திற்கான பயன்பாட்டிற்கு மட்டுமே ஆனது. அந்த வீட்டில் வசிக்கும் அனைவரும் நெட்ஃப்ளிக்ஸ் -ஐப் பயன்படுத்தலாம். அவர்கள், வீடு, பயணத்தில், விடுமுறையில் எங்கு இருந்தாலும் இதை பயன்படுத்தலாம். மேலும், டிரான்ஸ்ஃபர் ப்ரொஃபைல் மற்றும் மேனேஜ் ஆக்சஸ் அண்ட் டிவைசஸ் ஆகிய புதிய அம்சங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.” என மின்னஞ்சலில் எழுதியிருந்தது.

நெட்ஃப்ளிக்சின் இந்த நடவடிக்கை ஒரு அவசர நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இது குறித்த எச்சரிக்கை ஏதும் வரவில்லை என்றாலும், இது எதிர்பாராததும் அல்ல. நெட்ஃபிக்ஸ் பயனர்களிடையே கடவுச்சொல் பகிர்வை விரைவில் முடிவுக்குக் கொண்டுவரும் என்றும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் தெரிவித்த பல அறிக்கைகள் பல நாட்களாக வெளிவந்த வண்ணம் உள்ளன. 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.