13th Gen லேப்டாப்பில் மிரட்டலான லேப்டாப்… அசரவைக்கும் அம்சங்கள்!

ASUS Zenbook Laptop: ஸ்மார்ட்போன்களை போல் தற்போது லேப்டாப்களும் அதிக பயன்பாட்டில் வந்துவிட்டது. அதுவும் கொரோனா பெருந்தொற்றுக்கு பின், வீட்டில் இருந்தே வேலை கலாச்சாரம் அதிகமாகிய பின் இந்த லேப்டாப்கள் தான் ராஜாவாக மாறிவிட்டது எனலாம். இப்போதெல்லாம், யார் வீட்டில் நுழைந்தாலும், எந்த பூங்காவை பார்த்தாலும், எந்த காஃபி ஷாப்பை பார்த்தாலும், எங்கு பார்த்தாலும் ஒரு லேப்டாப்புடன் தான் இருக்கின்றனர். இவர்களின் வேலைகள் அனைத்தும் அந்த மடிக்கணினிகளிலேயே முடிந்துவிடுகிறது. 

அந்த காலத்தில் காலையில் காட்டுக்கு சென்று மாலையில் வீட்டுக்கு திரும்புவதாக உங்களின் மூத்தோர் சொல்லி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், இப்போதோ காலையில் லாக்-இன் செய்தால், மாலையில் லாக்-அவுட் செய்வதை தான் அனைவரும் தங்களின் வீட்டில் ஒரு புராணமாக பாடி வருகின்றனர். அந்த அளவிற்கு மடிக்கணினியுடன் ஒன்றிவிட்டனர் எனலாம். 

பணி சார்ந்தது மட்டுமின்றி கல்வி ரீதியிலும், வணிக ரீதியிலும் மடிக்கணினி இன்றியமையாத பாத்திரத்தை ஏற்றுள்ளது. எங்கும், எப்போதும் இணையத்தை பயன்படுத்த ஸ்மார்ட்போன் இருக்கிறது என்றாலும், அதிக பளூ உள்ள வேலைகளுக்கு லேப்டாப் தான் ஒரு விடை. அந்த வகையில், லேப்டார் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களின் வாடிக்கையாளர்களின் பிரிவுக்கு ஏற்ப கேம்கிங் லேப்டாப், ஆல்-பர்பஸ் லேப்டாப் என வகைகளை சந்தைகளில் அறிமுகப்படுத்திவிட்டனர். 

அந்த வகையில், இந்தியாவில் சமீபத்திய 13ஆவது தலைமுறை இன்டெல் செயலிகளுடன் ASUS தனது Zenbook S 13 OLED மாடல் லேப்டாப்பை மேம்படுத்தியுள்ளது. , ASUS Zenbook S 13 OLED 13th Gen i7 (UX5304) லேப்டாப்பின் விலை ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 990. இந்த மாடல் i5 ஆப்ஷனிலும் கிடைக்கிறது, இருப்பினும், அந்த மாடலின் விலை தற்போது தெளிவாக கூறப்படவில்லை. புதிய ASUS Zenbook S 13 OLED லேப்டாப்பின் விவரக்குறிப்புகள் மற்றும் முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்.

ASUS Zenbook S 13 OLED இரண்டு செயலி விருப்பங்களுடன் வருகிறது (Intel Core i5-1335U செயலி அல்லது Intel Core i7-1355U செயலி). இரண்டுமே Intel Iris Xe கிராபிக்ஸ் கொண்டவை. டிஸ்ப்ளே VESA சான்றளிக்கப்பட்ட HDR True Black 500 ஆகும். எனவே நீங்கள் தெளிவான காட்சி மற்றும் கருப்பு வண்ணங்களை நல்ல ஆழமான காட்சியுடன் அனுபவிக்க முடியும். அதன் 60Hz புதுப்பிப்பு வீதம் மென்மையான மற்றும் அதிவேக கேமிங் மற்றும் வீடியோ பிளேபேக்கை தருகிறது.

மடிக்கணினிகளில் இரண்டு வெவ்வேறு மெமரி மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் உள்ளன. அதாவது 16GB அல்லது 32GB LPDDR5 இன்டர்நெல் மெமரி ஆப்ஷனைகளை பெறுகிறார். ஸ்டோரேஜ்களின் ஆப்ஷன்களில் 512GB அல்லது 1TB M.2 NVMe PCIe 4.0 செயல்திறன் SSD அடங்கும். மடிக்கணினிகள் பலவிதமான I/O போர்ட்களைக் கொண்டுள்ளன, அவை பயனர்களுக்கு அம்சங்களை வழங்குகின்றன. 

வயர்லெஸ் இணைப்புக்காக, Asus Zenbook S 13 OLED 2023 பேட்டரி லேப்டாப் வைபை 6E மற்றும் புளூடூத் 5.3 வயர்லெஸ் கார்டுக்கான ஆதரவைக் கொண்டுள்ளது. இதன் மூலம், பயனர்கள் தங்கள் மடிக்கணினிகளை வயர்லெஸ் முறையில் இணையத்துடன் இணைக்க முடியும் மற்றும் புளூடூத் வழியாக மற்ற வயர்லெஸ் சாதனங்களுடன் தொடர்பு கொள்ளலாம். மடிக்கணினியின் பேட்டரி திறன் 63WHrs, 2S2P, 4-செல் Li-ion மற்றும் 65W AC அடாப்டருடன் வருகிறது. இந்த பேட்டரி அதிக ஆற்றல் கொண்ட பணிகளுக்கு போதுமான சக்தியை வழங்குகிறது மற்றும் அடாப்டர் மூலம் பேட்டரியை சார்ஜ் செய்யலாம்.

மேலும் படிக்க | Netflix புதிய அம்சம்: இனி படங்களை தேட வேண்டாம்.. அட்டகாசமான அப்டேட் இதோ
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.