முஸ்லிம்கள் போராடவில்லையா.. அப்போ இதெல்லாம் என்ன..? சீமானுக்கு தமீமுன் அன்சாரி "நறுக்" கேள்வி

சென்னை:
அநீதிகளுக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராடவில்லை என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது பெரும் சர்ச்சையான நிலையில், இதற்கு மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமீமுன் அன்சாரி காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.

மணிப்பூரில் நடந்த கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி சார்பிலான போராட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் பேசிய சீமான், திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் தொடர்ந்து ஓட்டு போடுவதற்கு எதிராக கருத்துகளை தெரிவித்தார். ஒருகட்டத்தில், “இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் சாத்தானின் பிள்ளைகள்” என்று அவர் கூறினார்.

ஆக்சிஜன் மாஸ்க்குக்கு பதிலாக டீ கப்.. “ரொம்ப சாதாரண விஷயம்”.. மா. சுப்பிரமணியன் புது விளக்கம்

சீமானின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இஸ்லாமிய, கிறிஸ்தவ அமைப்புகளும், பல்வேறு கட்சித் தலைவர்களும் சீமானின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, நடிகர் ராஜ்கிரண், “இஸ்லாமியர்கள் தொடர்ந்து பொறுமையாக இருந்து வருவதால் கண்ட கழிசடைகளும் பேசினால் நன்றாக இருக்காது” என காட்டமாக பதிலடி கொடுத்திருந்தார்.

இந்நிலையில், சீமானின் பேச்சுக்கு பதில் கொடுக்கும் விதமாக மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமீமுன் அன்சாரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் அவர், “முல்லை பெரியாறு, காவிரி உரிமை, கூடங்குளம், மீத்தேன், என்எல்சி, விவசாயிகள், மீனவர் நலன் என அனைத்திலும் முன்வரிசையில் நின்றவர்கள் முஸ்லிம்கள். அநீதிக்கு எதிராக போராடியதுண்டா? எனக் கேட்கும் சகோதரர் சீமான் அவர்களே.. கருத்தில் நிதானம் முக்கியம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.