Kavin: `இந்த மனிதப் பிறவி பெண் அன்பில் அடங்கிடும்!' காதலி மோனிகாவைக் கரம் பிடித்தார் கவின்

விஜய் தொலைக்காட்சியில் நெடுந்தொடர் மூலம், அறிமுகமானவர்  கவின். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தார்.

தற்போது சினிமாவிலும் கால் பதித்து நாயகனாகத் தமிழ் சினிமாவில் ஜொலிக்க ஆரம்பித்திருக்கிறார். ‘டாடா’ திரைப்படத்தின்  ப்ளாக்பஸ்டர் வெற்றியைத்  தொடர்ந்து நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில், இசையமைப்பாளர் அனிருத் இசையில், ஒரு படத்தில் நடித்துவருகிறார்.

கவின்

இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு கவினுக்கு விரைவில் மோனிகா எனும் பெண்ணுடன் திருமணம் நடைபெற உள்ளதாக இணையத்தில் செய்திகள் வெளியாகின.

அவரது திருமண அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருந்த நிலையில் இன்று காலை கவினின் திருமணம் நடைபெற்றிருக்கிறது.

கவின் – மோனிகாவுடன் புகழ்

தனது நீண்ட நாள் காதலி மோனிகாவை கரம் பிடித்திருக்கிறார் கவின். இவர்களது திருமணப்  புகைப்படங்கள் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. திரையுலக மற்றும் சின்னத்திரையுலக பிரபலங்கள் அவரது திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்களும் வலைதளங்களில் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

வாழ்த்துகள் கவின் – மோனிகா

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.