மகாத்மா கொலையை ஆதரிப்பவர்கள் எப்படி ஜெய்பீமுக்கு தேசிய விருது கொடுப்பாங்க: பிரகாஷ்ராஜ்

69வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டதை பார்த்து தமிழ் சினிமா ரசிகர்கள் அதிருப்தி அடைந்தார்கள். தமிழ் சினிமாவை வேண்டுமென்றே புறக்கணித்துவிட்டார்கள் என ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர்.

ரஜினிக்கு யோகி ஆதித்யநாத் தான் Role Model – இயக்குனர் பிரவீன் காந்தி
சிறந்த நடிகருக்கான தேசிய விருது புஷ்பா படத்திற்காக அல்லு அர்ஜுனுக்கு கொடுத்திருப்பதை ஏற்க முடியாது என்கிறார்கள்.

கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

ஜெய்பீம் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது சூர்யாவுக்கு அல்லது மணிகண்டனுக்கு கிடைக்கும் என தமிழ் ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். மேலும் சிறந்த நடிகைக்கான விருது ஜெய்பீமுக்காக லிஜோமோல் ஜோஸுக்கு கிடைக்க வேண்டும் என்று நினைத்தார்கள். அந்த இரண்டுமே நடக்கவில்லை.

இந்நிலையில் ஜெய்பீம் குறித்து பிரகாஷ்ராஜ் போட்ட ட்வீட் சூர்யா ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது.

ஜெய்பீம் பட போஸ்டர் மற்றும் கவிதை ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டு பிரகாஷ்ராஜ் கூறியிருப்பதாவது,

நம் மகாத்மாவின் கொலையை ஆதரிப்பவர்கள்..பாபாசாகேபின் அரசியலமைப்பை மாற்ற விரும்புபவர்களா ஜெய்பீமை கொண்டாடுவார்கள்??? #justasking என தெரிவித்துள்ளார்.

பிரகாஷ் ராஜின் ட்வீட்டை பார்த்த சமூக வலைதளவாசிகள் கூறியிருப்பதாவது,

சரியாக சொன்னீங்க சார். தேசிய ஒருமைப்பாட்டுக்கான விருதை தான் காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்கு கொடுத்திருக்கிறார்களே.

ஜெய்பீம் படத்திற்கு தேசிய விருது பல கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஏமாற்றமாக இருக்கிறது. அவர்கள் ஜெய்பீமை ஆதரிக்கவே மாட்டார்கள் சார்.

தேசிய விருதுகள் வர வர பான்மசாலா விருதுகளாகி வருகிறது. உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம் சார். நல்லா விளாசுங்கள் என தெரிவித்துள்ளனர்.

கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்

சிலரோ பிரகாஷ்ராஜை விளாசியிருக்கிறார்கள். மேலும் சிலரோ, சார் ஏற்கனவே நீங்கள் கொடைக்கானலில் கட்டி வரும் வீட்டிற்காக நோட்டீஸ் கொடுத்திருக்கிறார்கள். இந்த ட்வீட்டுக்காக உங்கள் வீட்டிற்கு ஐடி ரெய்டு வரப் போகிறார்கள். பார்த்து இருந்துக்கோங்க என்கிறார்கள்.

தேசிய விருதுகள் பாரபட்சமானது: சரியாக சொன்னார் ஏ.ஆர். முருகதாஸ் என பாராட்டும் ரசிகாஸ்

ஜெய்பீம், கர்ணன், சார்பட்டா பரம்பரை ஆகிய படங்களுக்கு தேசிய விருது கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அந்த மூன்று படங்களுக்குமே விருது கிடைக்கவில்லை.

புஷ்பாவுக்காக அல்லு அர்ஜுனுக்கு விருது கொடுத்ததை ஏற்க முடியாது என தமிழ், மலையாளம், கன்னட சினிமா ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள். அதை பார்த்த தெலுங்கு சினிமா ரசிகர்களோ, எல்லாம் வயித்தெரிச்சல், வேறும் ஒன்றும் இல்லை என்கிறார்கள்.

பிரகாஷ்ராஜின் ட்வீட்டை பார்த்தவர்கள் அவரின் கொடைக்கானல் வீடு பற்றி பேசுகிறார்கள். அவர் கொடைக்கானலில் வீடு ஒன்றை கட்டி வருகிறார். அந்த வீடை கட்ட பிரகாஷ்ராஜ் அனுமதி பெறவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹாவுக்கு அரசு அதிகாரிகள் நோட்டீஸ்: ஒரு வாரத்திற்குள் விளக்கம் தேவை

இது குறித்து விளக்கம் கேட்டு பிரகாஷ்ராஜுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள். அவர் 7 நாட்களுக்குள் விளக்கம் அளித்து உரிய ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பிரகாஷ்ராஜ் வீடு கட்டி வரும் பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் வந்து ஆய்வு செய்துவிட்டு சென்றிருக்கிறார்கள். தன் வீட்டுப் பகுதியில் இருக்கும் பொது சாலையில் சிமெண்ட் போட்டு அதை பிரகாஷ்ராஜ் பயன்படுத்துவதாகவும் புகார் எழுந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.