தமிழகம் முழுக்க இடி மழை வெளுக்க போகுது… தமிழ்நாடு வெதர்மேன் வார்னிங்!

தமிழகம் முழுவதும் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

கனமழைதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வபோது இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் அவ்வப்போது நல்ல மழை பெய்து வருகிறது.பல்வேறு மாவட்டங்களில் மழைகுறிப்பாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று மாலை முதலே திருச்சி, கும்பகோணம், நெல்லை, தூத்துக்குடி, கோவில்பட்டி, தேனி,சேலம், அரியலூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்தது.
​​தமிழ்நாடு வெதர்மேன்இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவீட்டில் மழையை இழந்த கரூர், திருப்பூர், கோயம்புத்தூர், திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், உள்நாடு, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் இன்று நல்ல ஆக்ஷனை பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.
​​டெல்டா மாவட்டங்கள்டெல்டாவிலும் சில மாவட்டங்களில் 100 மி.மீட்டர் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகம் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அடுத்த ஒரு வாரம் சென்னை உட்பட மாநிலம் முழுவதும் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
​​சென்னையில் மழைகடந்த ஒரு மாதமாக இந்தியாவிலேயே அதிக வெப்பமான இடமான பாளையங்கோட்டையில் நேற்று 40.6 C என்ற பதிவான வெப்பம் பதிவாகியுள்ளது என்றும் சில மாதங்களில் பாளையங்கோட்டையில் முதல் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார். சென்னையில் இரவு நேரத்தில் மீண்டும் டமால் டூமீல்கள் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் ஆகஸ்ட் மாத ரெக்கார்டுகள் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.
​​பிரேக் மான்சூன் சீசன்”பிரேக் மான்சூன் சீசன்” காரணமாக இந்த தென்டமேற்கு பருவமழை காலத்தில் சென்னை மிக அதிகமான மழையை பெற்றுள்ளது என்றும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தமிழகத்தின் பல்வேறு பகுதிளில் இன்று மாலை முதல் நல்ல மழை பெய்து வரும் நிலையில் பலரும், தமிழ்நாடு வெதர்மேனின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் உங்களின் கணிப்பு துல்லியமாக உள்ளது எங்களின் ஏரியாவில் மழை வெளுத்து வாங்குகிறது என கூறி வருகின்றனர்.
​​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.