iPhone பிரியர்களுக்கு சூப்பர் செய்தி: இந்த நாளில் அறிமுகம்.. விலை, பிற விவரங்கள் இதோ

ஆப்பிள் ஐபோன் 15 வெளியீட்டு நிகழ்வு: ஐபோன் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி!! இவர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த செய்தி வந்துவிட்டது. ஆப்பிள் நிறுவனம் இறுதியாக ஐபோன் 15 வெளியீட்டு நிகழ்வை பற்றி கூறிவிட்டது. ஐபோன் 15 செப்டம்பர் 12 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வெளியீட்டு நிகழ்வு இந்தியாவில் இரவு 10:30 மணிக்கு நடக்கிறது. இந்த ஆண்டு ஐபோன்களில் பல முக்கிய மேம்படுத்தல்கள் இருக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் வடிவமைப்பில் எந்த மாற்றமும் இருக்காது. இது தொடர்பாக கசிந்தூள்ள தகவல்கள், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 ப்ரோ மாடலின் விலைகள் அதிகமாக இருக்கலாம் என தெரிவிக்கின்றன. அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் விரிவாக காணலாம். 

iPhone 15: இதில் என்ன எதிர்பார்க்கலாம்

இந்த முறை ஐபோன் 15 சீரிசில் பல முக்கிய மாற்றங்கள் காணப்படலாம். அனைத்து மாடல்களும் USB-C சார்ஜுடன் வரலாம். ப்ரோ மாடல்களில் A17 பயோனிக் சிப் இருக்கும். மேலும் ஸ்டாண்டர்ட் மாடல்கள் A16 பயோனிக் சிப்பைக் கொண்டிருக்கும். இது தவிர, குறிப்பிடத்தக்க வகையில் டைனமிக் ஐலேண்ட் கிடைக்கக்க்கூடும். 

iPhone 15 Pro Max: பெரிஸ்கோப் லென்ஸ் கிடைக்கும்

ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸில் (iPhone 15 Pro Max) டைட்டானியம் ஃபினிஷ் காணப்படுகிறது. ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் பெரிஸ்கோப் லென்ஸைக் கொண்டிருக்கலாம் என்பதால் இது குறித்த விவாதங்கள் இருக்கலாம். இது தவிர, ப்ரோ மாடலில் மியூட் ஸ்விட்ச் பட்டனுக்குப் பதிலாக புதிய ஆக்ஷன் பட்டனையும் பயனர்கள் காணலாம். 

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9

ஐபோன் 15 தவிர, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 ஐ அறிமுகப்படுத்தும். இது சீரிஸ் 8 க்கு அடுத்ததாக இருக்கும். ஆப்பிள் வாட்ச் அல்ட்ராவின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பையும் பயனர்கள் எதிர்பார்க்கலாம். மேலும் ஆப்பிள் நிறுவனம் M3 செயலியுடன் கூடிய iMac-ஐ அறிமுகப்படுத்தலாம் என வதந்திகள் பரவி வருகின்றன. ஐபோன் 15 அறிமுகத்துடன், USB-C சார்ஜிங் கேஸுடன் AirPods Pro அறிமுகப்படுத்தப்படலாம். செப்டம்பர் நிகழ்வில், iOS 17 மற்றும் பிற இயக்க முறைமைகளுக்கான வெளியீட்டு அட்டவணையை ஆப்பிள் நிறுவனம் வெளியிட வாய்ப்புள்ளது.

ஐபோன் 15 தொடரில் என்ன மாற்றங்கள் இருக்கும்?

மியூட் ஸ்விட்ச் பட்டன் கிடைக்காது: 

புதிய ஐபோன் மாடலில் மியூட் ஸ்விட்ச் பட்டன் இருக்காது. ஐபோனில் உள்ள மியூட் ஸ்விட்ச்க்கு பதிலாக இம்முறை கஸ்டமைசேஷன் பட்டன் கொடுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பயனர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப இந்த பொத்தானைப் பயன்படுத்த முடியும் மற்றும் சிறப்புப் பணிகளுக்காகவும் இந்தப் பொத்தானை ஒதுக்க முடியும். இதன் மூலம், ஐபோன் இயங்கும் அனுபவம் இன்னும் சிறப்பாக மாறும்.

லைட்னிங் போர்ட்டுக்கு பதிலாக யூஎஸ்பி-சி போர்ட் கிடைக்கும்: 

மிக முக்கியமான மாற்றங்களில், ஐபோன் 15 சீரிஸில் லைட்னிங் போர்ட்டுக்கு பதிலாக இந்த முறை யூஎஸ்பி சி போர்ட்டைக் காணலாம். இதன் மூலம், போன் வேகமாக சார்ஜ் ஆவது மட்டுமின்றி, ஐபோனின் பேட்டரியை மிகச் சிறந்த முறையில் பயன்படுத்த முடியும்.

நாட்ச் அகற்றப்படும், டைனமிக் ஐலேண்ட் வரும்: 

ஐபோன் 14 தொடரில் பெரும்பாலான பயனர்கள் டைனமிக் ஐலேண்டில் விருப்பம் காட்டினார்கள். ஆகையால், நாட்ச்சுக்கு பதிலாக டைனமிக் ஐலேண்டு கொண்டு இந்த முறை புதுப்பிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முறை ஐபோன் 15 இல் இருந்து நாட்ச் முற்றிலும் மறைந்துவிடும் என்பதற்கான காரணம் இதுதான்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.