ஆதித்யா எல் 1 மிஷன்: பறக்க தயாரான பிஎஸ்எல்வி சி 57… தொடங்கியது 24 மணி நேர கவுண்டவுன்!

ஆதித்யா எல்1

இஸ்ரோ சமீபத்தில் நிலவை ஆய்வு செய்யும் சந்திரயான் 3 திட்டத்தை தொடங்கியது. இந்தத் திட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்து சூரியனை ஆய்வு செய்யும் பணியில் இறங்கியுள்ளது இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோ. இதற்காக ஆதித்யா எல்1 என்ற விண்கலத்தை நாளை விண்ணில் செலுத்துகிறது.

24 மணி நேர கவுண்டன்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் ஏவுதளத்தில் இருந்து நாளை காலை 11.50 மணிக்கு பிஎஸ்எல்வி சி57 ராக்கெட் மூலம் ஆதித்யா விண்கலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான 24 மணி நேர கவுண்டன் இன்று தொடங்கியுள்ளது.

சிக்குவாரா சீமான்? விஜயலட்சுமியை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி வாக்குமூலம் பதிவு செய்ய போலீசார் முடிவு!

லாக்ராஞ்ச் புள்ளி 1

இந்த ஆதித்யா எல்1 விண்கலம் 1475 கிலோ எடை கொண்டது. நான்கு மாதங்களில் 15 லட்சம் கிலோ மீட்டர் பயணிக்கும் இந்த ஆதித்யா எல் 1 விண்கலம், லாக்ராஞ்ச் புள்ளி 1 என்ற பகுதியில் நிலை நிறுத்தப்பட்டும். இந்தப் பகுதிடி சூரியன் மற்றும் பூமியின் ஈர்ப்பு விசைகள் சமநிலையில் இருக்கும் புள்ளி ஆகும்.

7 கருவிகள்

லாக்ராஞ்ச் 1 என்ற புள்ளியில் நிலை நிறுத்தப்படும் ஆதித்யா எல் 1 விண்கலம் பின்னர் சூரியனின் வெளிப்புற அடுக்குகள் குறித்து ஆய்வு செய்யும். மேலும் இந்த ஆய்வின் மூலம் சூரியனின் செயல்பாடுகள் மற்றும் அதன் பண்புகள் குறித்த தகவல்களையும் பெற முடியும். இந்த ஆய்வுக்காக ஆதித்யா எல்1 விண்கலத்தில் 7 கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

அணைத்து பிடித்த பிரதமர் மோடி… பதக்கத்தை காட்டிய பிரக்ஞானந்தா… கலக்கல் க்ளிக்ஸ்!

ககன்யான் திட்டம்

ஆதித்யா எல் 1 விண்கலம் 5 ஆண்டுகளுக்கும் மேலாக விண்வெளியில் தங்கி ஆய்வு செய்யும் என கூறப்படுகிறது. இந்த திட்டத்தை தொடர்ந்து அடுத்ததாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை இஸ்ரோ மேற்கொள்ளது. இதற்காக பணிகள் அக்டோபரில் தொடங்க உள்ள நிலையில் முதற்கட்டமாக வியோமித்ரா என்ற பெண் ரோபோவை விண்வெளிக்கு அனுப்பவுள்ளது இஸ்ரோ என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.