90ஸ் கிட்ஸை இசைக்கடலில் மூழ்க வைத்த யுவன் ஷங்கர் ராஜாவின் பிறந்தாள் இன்று !!

ராஜா வீட்டு பிள்ளைஇசையுலகில் தனக்கென ஒரு யுனிவெர்சை உருவாக்கியவர் தான் யுவன் ஷங்கர் ராஜா. தமிழ் சினிமாவில் ஒரேமாதிரியான இசையை கேட்டு வந்த ரசிகர்களுக்கு வெஸ்டர்ன் இசையை அறிமுகம் செய்தவர் யுவன் என்றே சொல்லலாம். இவர் ராஜா வீட்டு பிள்ளை. இசைஞானி இளையராஜாவின் இளைய மகன் தான் யுவன் ஷங்கர் ராஜா. தந்தையின் இசை வாழ்வுக்கு தப்பாமல் இவரின் இசை வாழ்க்கை இருந்து வருகிறது. யுவன் ஷங்கர் ராஜாவின் 44வது பிறந்தநாள் இன்று !!

யுவனின் தொடக்ககாலம்யுவன் தனது 16 வயதில் இசையமைப்பாளராக ஆனார். அவரின் அம்மாவின் அறிவுறுத்தலால் இசையை தனது தொழிலாக மாற்றினார். தொடக்கத்தில் ஆல்பம் பாடல்களை உருவாக்கினார். இந்த ஆல்பம் பாடல்கள் தயாரிப்பாளர் சிவாவிற்கு பிடித்துப்போக, யுவனை ஒரு ட்ரைலர் இசை உருவாக்கி கொடுக்குமாறு கேட்டிருக்கிறார். யுவனின் ட்ரைலர் இசையும் தயாரிப்பாளருக்கு பிடித்துப்போக, அரவிந்தன் என்னும் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை யுவன் ஷங்கர் ராஜாவிற்கு கொடுத்தார். வேலை, கல்யாண கலாட்டா இந்த படங்களுக்கு இசையமைத்தாலும், அவருக்கு பெரிய பெயர் கிடைக்கவில்லை.

அசூர வளர்ச்சிஎன்னதான் முதல் மூன்று படங்களில், அவரின் பெயர் அறியப்படவில்லை என்றாலும், அடுத்ததாக அவர் இசையமைத்த பூவெல்லாம் கேட்டுப்பார் என்னும் படத்தின் இசை மூலம், “யாருபா இந்த படத்துக்கு இசையமைத்தது” என ஆச்சரியப்படும் அளவிற்கு தன்னை இசையின் மூலம் நிரூபித்து காட்டினார் யுவன். அதன் பின்னர், அவரது கடின உழைப்பினால், ஒவ்வொரு படமாக வாய்ப்பு அவரைத் தேடி வந்தது. தீனா, துள்ளுவதோ இளமை, மௌனம் பேசியதே, ஏப்ரல் மாதத்தில், நந்தா என தொடர்ந்து இசையமைக்க, யுவனின் மார்க்கெட் அசூர வளர்ச்சி அடைந்தது. புது படமா, அப்போ யுவன் தான் இசை என முடிவு செய்தனர் தயாரிப்பாளர்கள். 90களில் அவரின் பயணம் தொடங்க, 2000த்தில் அப்படி ஒரு உச்சிக்கு சென்றுவிட்டார் யுவன்.

அனைவருக்குமான இசைகாதல், கோவம், சண்டை, காதல் தோல்வி, ஹீரோவின் மாஸ் BGM, சோக காட்சி என அனைத்திலும் ஸ்கோர் செய்தார் யுவன். ஒரு பக்கா பேக்கேஜ் இசையமைப்பாளராக இருந்தார் யுவன். இவரின் காதல் BGM கேட்டால், காதலிக்காதவர்கூட காதலிக்கவேண்டும் என நினைப்பார்கள். அதே, யுவன் இயற்றும் காதல் தோல்வி BGM கேட்டால், அதற்கும் ஃபீல் செய்வார்கள் ரசிகர்கள். அவரின் இசையாலேயே அவரின் யூனிவெர்ச்சுக்கு அழைத்து சென்றுவிடுவார் யுவன்.
அன்று முதல் இன்று வரை2000களில் யுவனின் இசையால் தமிழ் திரையுலகே இயங்கி வந்தது என்றால் அது மிகையாகாது. அன்றும் சரி இன்றும் சரி யுவனின் இசைக்கு ரசிகர்கள் குறைந்ததே இல்லை. ரீமிக்ஸ் பாடல்களுக்கான ட்ரெண்டை செட் செய்தார் யுவன். பழைய பாடல்களை அதே இசையில் வேறுமாதிரி கொடுக்க இவரால் மட்டும்தான் முடியும். இவரின் திரை வாழ்வில், 7 ஜி ரெயின்போ காலணி திரைப்படம், ஒரு மைல்கல்லாக இருந்தது. கதை, அதற்கேற்ற இசையென இரண்டுமே ஒன்றிணைந்து வந்தது. இந்த படத்தின்மூலம், யுவனின் ரசிகர்கள் இன்னும் யுவனின் இசையுடன் ஒட்டிக்கொண்டனர். மன்மதன், ராம், அறிந்தும் அறியாமலும், தாஸ், ஒரு கல்லூரியின் கதை, கண்ட நாள் முதல், கள்வனின் காதலி, சண்டக்கோழி முதல் மங்காத்தா, ஆரம்பம், அஞ்சான், தர்மதுரை, தரமணி, ப்யார் பிரேமா காதல், மாரி 2, நேர்க்கொண்ட பார்வை, வலிமை, விருமன், லவ் டுடே, நானே வருவேன், கஸ்டடி என அன்று முதல் இன்று வரை ரசிகர்களை அவரின் இசைமூலம் திருப்திப்படுத்திக்கொண்டே இருக்கிறார் யுவன்.
இயக்குனரும் இசையும்யுவனிடம் இருக்கும் மிகப்பெரிய ஸ்பெஷாலிட்டியே, வஸந்த், செல்வராகவன், அமீர், ராம், லிங்குசாமி என இயக்குநர்களுக்கு ஏற்றவாறு தனது இசை பாணியை வகுத்திருப்பது தான். அதோடு, ஒரு பாடலின் வரிகள் தொடங்குவதற்கு முன் வரும் இசையை வைத்தே இது யுவனின் பாடல் என எவராலும் எளிதில் அடையாளம் காணப்படும். அந்த அளவிற்கு தனித்துவமான இசையை கொடுப்பவர்தான் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா
யுவனுக்கு கிடைத்த அங்கீகாரம்16 வயதில் இசையமைக்கத் தொடங்கிய யுவன் தனது 25 வயதிற்குள் 150 படங்களில் வேலை செய்தார். இப்போது அந்த எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்திருக்கிறது. யுவனின் இசைக்கு மிகுதியான ரசிகர்கள் உள்ளனர், குறிப்பாக யுவனின் BGMக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. அதனால்தான் இவரை BGM கிங் என அன்பாக அழைப்பார்கள். 2018இல் கலைமாமணி விருதை பெற்றார் யுவன். மேலும் கௌரவ டாக்டர் பட்டமும் சத்யபாமா பல்கலைக்கழகம் இவருக்கு அளித்திருக்கிறது. SIIMA விருதுகள், மிர்ச்சி விருது, ஆனந்த விகடன் விருது, பிலிம் பேர் விருது, தமிழ்நாடு மாநில விருது, விஜய் அவார்ட்ஸ் என இவரின் விருது பட்டியலும் அவரின் இசையைப்போல மிக அதிகம்.
யுவனின் லைன் அப்ஸ்அடுத்ததாக, பரம்பொருள், இறைவன் போன்ற படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் யுவன். இந்த படங்கள் கூடிய விரைவில் வெளியாகவுள்ளன. பெரும் எதிர்பார்ப்போடு இருக்கும் தளபதி 68 படத்திற்கும் யுவனின் இசைதான் இயங்கப்போகிறது. இது குறித்து, தளபதி 68 படத்தின் இயக்குனரும் இவரின் அண்ணனுமான வெங்கட் பிரபு ட்விட்டரில் “Happy bday Thambi waiting for u to rock #Thalapathy68” என பதிவிட்டிருக்கிறார்.
யுவனின் இசைக்கு ஏராளமான ரசிகர்கள். அந்த வகையில், இசையமைப்பாளர் யுவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி சமூக வலைத்தளங்களில் பதிவுகள் பறக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.