Samsung Galaxy A05 : MediaTek ப்ராசஸர், 4GB ரேம் என சாம்சங்கின் அடுத்த என்ட்ரி-லெவல் மொபைல்! இணையத்தில் லீக் ஆன டிசைன்!

சாம்சங் நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக விரைவில் வெளியாக இருக்கும் Galaxy A05 மொபைலின் படம் மற்றும் அம்சங்கள் குறித்த விவரங்கள் Google Play Console பட்டியலில் இடம்பெற்றுள்ளது. கடந்த ஆண்டு வெளியான சாம்சங் A04 – ஐ தொடர்ந்து அதன் என்ட்ரி-லெவல் மொபைலான Samsung A05 – ஐ இந்தாண்டு இறுதியில் வெளியிட சாம்சங் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. அதில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் குறித்தும் அதன் டிசைன் குறித்தும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

​Galaxy A05 மொபைலின் ப்ராசஸர்Galaxy A05 மொபைலில் MediaTek’s Helio G85 SoC ப்ராசஸர் இடம்பெற்றுள்ளதாக Google Play Console பட்டியலில் தகவல் வெளியாகியுள்ளது. two ARM Cortex-A75 CPU cores clocked at 2GHz and six ARM Cortex-A55 CPU cores clocked at 1.8GHz இடம்பெற்றுள்ளதும் தெரிய வந்துள்ளது.
​Galaxy A05 கேமராGalaxy A05 கேமராவில் டூயல் ரியர் பொறுத்தப்பட்டுள்ளதாக அதன் டிசைனில் வெளியாகியுள்ளது. அதன்படி, 50MP கேமரா இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
​பேட்டரிGalaxy A05 மொபைலில் A04 மாடலில் பயன்படுத்தியது போலவே 5000mAh பேட்டரியே இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதில் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இடம்பெற வாய்ப்புள்ளது.
​Galaxy A05 டிஸ்பிளே மற்றும் விலைசாம்சங் Galaxy A05 மொபைலில் 6.5 இன்ச் IPS LCD டிஸ்பிளே மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரெட் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதன் விலை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. Samsung Galaxy A04 11,999 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.