ஆதித்யா எல் 1 திட்டம் வெற்றி பெற வேண்டி இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதி உட்பட கோவல்களில் சிறப்பு வழிபாடு!

ஆதித்யா எல் 1 விண்கலம் பிஎஸ்எல்வி சி 57 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதனை முன்னிட்டு ஆதித்யா எல் 1 திட்டம் வெற்றி பெற வேண்டி இஸ்ரோ தலைவர் சோம்நாத் நேற்று ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டை செங்காளம்மா பரமேஸ்வரி கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தார். பிஎஸ்எல்விசி 57 ராக்கெட் மாடலை வைத்து சோம்நாத் சிறப்பு பூஜை செய்தார்.

அவருடன் இஸ்ரோ விஞ்ஞானிகள் சிலரும் சென்றனர். இதேபோல் திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் இஸ்ரோ விஞ்ஞானிகள் சிறப்பு வழிபாடு செய்தனர். ஆதித்யா எல் 1 மாதிரி விண்கலத்தின் மாதிரியை ஏழுமலையானிடம் வைத்து பூஜை செய்தனர். இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒவ்வொரு சோதனையின் போதும் அதுதொடர்பான விண்கலத்தின் மாதிரிகளை வைத்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.

அப்பாடா.. சூப்பர் நியூஸ் சொன்ன இந்திய வானிலை மையம்.. இந்த வார இறுதியில் சரியான சம்பவம் இருக்காம்!

சமீபத்தில் சந்திரயான் 3 வண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கு முன்பும் இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர். இதேபோல் இஸ்ரோவின் ஆதித்யா எல்-1 திட்டம் வெற்றி பெற வேண்டி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று காலை சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. இதில், பங்கேற்றவர்கள் இந்திய தேசிய கொடியை கைகளில் ஏந்தியிருந்தனர்.

ஆதித்யா விண்கலம் இன்று காலை 11.50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. பிஎஸ்எல்வி சி57 ராக்கெட் மூலம் ஆதித்யா விண்கலம் விண்ணில் பாய்வதை காண ஸ்ரீஹரிகோட்டாவில் ஏராளமான மக்கள் திரண்டுள்ளனர்.

கருப்பு சிவப்பு புடவையில் நாகினி நடிகை மவுனி ராய்… ஹாட் அன்ட் க்யூட் க்ளிக்ஸ்!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ இதுவரை நிலவு மற்றும் செவ்வாய் கிரத்தில் தடம் பதித்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. ஆனால் தற்போதுதான் முதல் முறையாக சூரியனை ஆய்வு செய்யவுள்ளது. இஸ்ரோவின் இந்த ஆய்வு திட்டத்தை ஒட்டுமொத்த இந்திய மக்களும் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.