Jailer: ரஜினியின் ஜெயிலர் படத்தினால் கலாநிதி மாறனுக்கு இத்தனை கோடி லாபமா ?அடேங்கப்பா..!

ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி மூன்று வாரங்களை கடந்த போதும் தற்போதும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக திரையரங்கங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. நெல்சனின் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான இப்படம் மூன்று வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் நீண்ட நாட்களுக்கு பிறகு பழைய ரஜினியை திரையில் பார்த்ததாக கூறி வருகின்றனர். திரையில் பார்த்து கொண்டாடும் வகையில் ஜெயிலர் படத்தில் பல காட்சிகள் இடம்பெற்றது இப்படத்திற்கு பலமாக அமைந்தது.

ஜெயிலர் லாபம்

அதன் காரணமாகவே ஜெயிலர் படத்தை பலமுறை ரசிகர்கள் திரையில் பார்த்து வருகின்றனர். அந்த வைப்பை திரையில் மட்டுமே அனுபவிக்கமுடியும் என்பதால் அனைவரும் ஜெயிலர் படத்தை திரையில் பலமுறை பார்த்து வருகின்றனர்.

‘தளபதி 68’ அப்டேட்: ஆரம்பமே அமர்க்களம்.. பெருசா சம்பவம் செய்யும் வெங்கட் பிரபு.!

தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் அயல்நாடுகளிலும் இப்படம் சக்கைபோடு போட்டு வருகின்றது. அதன் காரணமாகாவே இப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனையை படைத்து வருகின்றது. இதுவரை ஜெயிலர் திரைப்படம் 600 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தை தயாரித்த கலாநிதி மாறன் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கின்றார்.

சன் பிக்சர்ஸ் அடித்த ஜாக்பாட்

அதன் வெளிப்பாடாக ரஜினிக்கு விலையுயர்ந்த கார் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார் கலாநிதிமாறன். இதைத்தவிர காசோலையும் கொடுத்துள்ளார். ரஜினி மட்டுமல்லாமல் இப்படத்தின் இயக்குனரான நெல்சனுக்கும் கலாநிதிமாறன் காசோலை மற்றும் விலையுயர்ந்த கார் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் ஜெயிலர் படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு 250 கோடி வரை லாபம் கிடைத்துள்ளதாக ஒரு தகவல் வந்துள்ளது. படத்தின் பட்ஜெட் மற்றும் இதர செலவு போக 250 கோடி லாபத்தை ஜெயிலர் படத்தின் மூலம் சன் பிக்சர்ஸ் ஈட்டியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்த படங்களிலேயே அதிக லாபம் ஈட்டி கொடுத்த படமாக ஜெயிலர் உருவெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.