திருப்பதி பிரமோற்சவம்… கையெழுத்தான ஒப்பந்தம்… 300 சிறப்பு பேருந்துகள்… வெளியான அதிரடி அறிவிப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவத்தை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

திருப்பதி பிரமோற்சவம்திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் வரும் 18 ஆம் தேதி வருடாந்திர பிரமோற்சவ விழா தொடங்க உள்ளது. பிரமோற்சவ விழாவை முன்னிட்டு திருப்பதி திருமலை தற்போது முழுவீச்சில் தயாராகி வருகிறது. பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தான நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.தரிசனங்கள் ரத்துகுறிப்பாக சாமானிய மக்களும் எளிதாக ஏழுமலையானை தரிசனம் செய்யும் வகையில் தேவஸ்தான நிர்வாகம் வழிவகை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பதி பிரமோற்சவத்தின் போது சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது என அறித்த தேவஸ்தான நிர்வாகம், விஜபி தரிசனத்தையும் ரத்து செய்துள்ளது.
​ திருப்பதி தேவஸ்தானத்தின் சூப்பர் அறிவிப்பு… இதை எதிர்பார்க்கலயே… கொண்டாடும் பக்தர்கள்!​போக்குவரத்து வசதிமேலும் சில சிறப்பு தரிசனங்களையும் திருமலை திருப்பதி தேஸ்வதானம் ரத்து செய்துள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பக்தர்கள் சிரமம் இன்றி பிரமோற்சவ விழாவில் பங்கேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பிரமோற்சவ விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் போக்குவரத்து வசதிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இருமாநில அதிகாரிகள்அந்த வகையில் பக்தர்களின் வசதிக்காக சிறப்புப் பஸ்களை இயக்குவது குறித்து ஆந்திரா மற்றும் தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது. இதனை முன்னிட்டு இருமாநில போக்குவரத்து கழக அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் திருப்பதியில் நடைபெற்றது.
​ ஆட்டத்தை ஆரம்பித்த ஆதித்யா எல் 1… அசத்தல் அப்டேட் கொடுத்த இஸ்ரோ!​ஒப்பந்தம் கையெழுத்துஇதில் திருப்பதி பிரமோற்சவத்தின் போது சிறப்பு பேருந்துகளை இயக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் பேருந்துகளை இயக்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் ஆந்திரா மற்றும் தமிழ்நாடு மாநில அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கையெழுத்திட்டனர்.
​ விஜயலட்சுமிக்கும் வீரலட்சுமிக்கும் மோதல்… தீயாய் பரவும் வீடியோ… பரபரப்பு!​300 சிறப்பு பேருந்துகள்அதன்படி ஆந்திர மாநிலத்தில் இருந்து 150 பேருந்துகள் மற்றும் தமிழ் நாட்டில் இருந்து 150 பேருந்துகள் என மொத்தம் 300 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. திருப்பதி – சென்னைக்கு ஊத்துக்கோட்டை வழியாக 30 பேருந்துகளும் திருப்பதி – காஞ்சிபுரத்துக்கு புத்தூர், திருத்தணி வழியாக 20 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.
திருப்பதி டூ சென்னைஇதேபோல் திருப்பதி – சென்னைக்கு ஸ்ரீகாளஹஸ்தி வழியாக 5 பேருந்துகளும், திருப்பதி – திருவண்ணாமலைக்கு வேலூர், சித்தூர் வழியாக 10 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. மேலும் திருப்பதி – வேலூருக்கு சித்தூர் வழியாக 65 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. திருப்பதியில் இருந்து கிருஷ்ணகிரிக்கு சித்தூர், குப்பம் வழியாக 15 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
​ என்னை கைது பண்ண போறாங்களா… அசால்ட்டாய் டீல் செய்த சீமான்!​தமிழ்நாட்டில் இருந்து
திருப்பதியில் இருந்து ஓசூருக்கு சித்தூர், குப்பம் வழியாக 5 சிறப்புப் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல் தமிழ் நாட்டில் இருந்தும் திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சென்னை, தாம்பரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், காஞ்சிபுரம், திருத்தணி, திருப்பத்தூர், புதுச்சேரி, திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மதுரை, சேலம், கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, அரூர், ஓசூர் ஆகிய ஊர்களில் இருந்து திருப்பதிக்கு 150 சிறப்புப் பஸ்கள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் அதிகரிக்கப்படும்தேவையை பொருத்து சிறப்பு பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் இருமாநில போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு திருப்பதியில் இரண்டு பிரமோற்சவங்கள் நடைபெற உள்ள நிலையில் இருமாநில அரசுகளும் சிறப்பு பேருந்துகளை அறிவித்திருப்பது பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

​ ப்பா… என்ன பார்வை… மாளவிகா மோகனனின் வேறலெவல் போட்டோஸ்… ஹார்ட்டின்களை குவிக்கும் நெட்டிசன்ஸ்!​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.