உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி – வாளோடு வரும் சாமியார் – காப்பு மாட்டுமா காவல் துறை?

சென்னையில் செப்டம்பர் 2ஆம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசிய உதயநிதி, “சனாதனம் சமத்துவத்திற்கும் சமூகநீதிக்கும் எதிரானது. டெங்கு, மலேரியா, கொரோனா போல சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டியது” என்று பேசியிருந்தார்.

சனாதனம் தொடர்பான உதயநிதியின் பேச்சுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய அளவிலும் வலதுசாரி அமைப்புகள் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அமித்ஷா, நட்டா என பாஜகவின் முன்னணி தலைவர்களின் உதயநிதியின் பேச்சை முன்வைத்து இந்தியா கூட்டணியை விமர்சித்தனர். உதயநிதி மீது டெல்லி, பீகார் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதோடு, அவரை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

எனினும், சனாதனம் பற்றிய தனது கருத்து சரியானதுதான் என்றும், அதில் இப்போதும் உறுதியாக இருப்பதாகவும், அதனால் வரும் விளைவுகளை எதிர்கொள்ள தயார் எனவும் உதயநிதி தெரிவித்துவிட்டார். மேலும் தனது பேச்சை பாஜகவினர் திரித்து பொய் செய்தி பரப்புவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். ஆனாலும், உதயநிதி மீதான வார்த்தை தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.

இந்த நிலையில் உதயநிதி பேச்சுக்கு எதிர்வினையாக சர்ச்சைக்குரிய வகையில் அறிவிப்பு ஒன்றை அயோத்தி சாமியார் பரம்ஹன்ஸ் ஆச்சார்யா வெளியிட்டுள்ளார்.

பரமஹன்ஸ் ஆச்சாரியா கூறும்போது, பூமியில் ஒரே ஒரு மதம் இருந்தது, அதுதான் சனாதன தர்மம். சனாதன தர்மத்திற்கு தொடக்கமும் இல்லை, முடிவும் இல்லை. சனாதன தர்மம் அழியவில்லை, ஒருபோதும் அழிக்கவும் முடியாது. சனாதன தர்மத்தை யாரேனும் அழிக்க முயன்றால் அவர்கள் அழிக்கப்படுவார்கள் என்று எச்சரித்தார்.

இந்த கத்துக்குட்டியால் அதிமுகவை ஒழிக்க முடியாது – ஜெயக்குமார்

மேலும், “உதயநிதி ஸ்டாலின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி சன்மானம் அறிவிக்கிறேன். அவரது தலையை யாரும் கொண்டு வரவில்லை என்றால், என் கையால் அவரது தலையை துண்டிப்பேன். உதயநிதி தலையை துண்டிக்க எனது வாளையும் தயார் செய்துள்ளேன்” என்று சர்ச்சைக்குரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், உதயநிதியின் புகைப்படத்தையும் அவர் வாளால் குத்திக் கிழித்தார்.

பல ஆண்டுகளுக்கு முன்னதாக ராமர் குறித்து பேசிய முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் தலையை சீவி வருபவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கப்படும் என விஷுவ ஹிந்து பரிஷத் தலைவர் பேசியது சர்ச்சையானது.

இதுதொடர்பாக கருணாநிதியிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு, எனது தலையை நானே சீவ முடியவில்லை என தனக்கு வழுக்கை விழுந்துள்ளதை நகைச்சுவையாக குறிப்பிட்டு அதற்கு பதில் தந்தார் கருணாநிதி. அதே வகையிலான சர்ச்சை கருணாநிதியின் பேரன் உதயநிதிக்கு வந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.