சனாதன தர்மம்: வாய் திறந்த காங்கிரஸ்… உதயநிதி ஸ்டாலின் பேச்சிற்கு கே.சி.வேணுகோபால் பதில்!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது தேசிய அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். குறிப்பாக தமிழக அரசியல் களத்தில் அண்ணாமலையின் நடைபயணம், அதிமுகவின் அட்டாக் அரசியல் உள்ளிட்டவை ஓரங்கட்டப்பட்டு விட்டன. மெயின் டாபிக்கே உதயநிதி ஸ்டாலின் பேசியது தான்.

முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

இதற்கு பதிலடி கொடுக்கிறோம், கருத்து தெரிவிக்கிறோம் என்று அந்த விஷயத்தை தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருக்கின்றனர். அப்படியென்ன பேசினார் எனக் கேட்கலாம். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாடு சமீபத்தில் நடைபெற்றது.

சனாதன ஒழிப்பு அவசியம்

அதில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டுள்ளார்கள். இது என்னை மிகவும் கவர்ந்துள்ளது. சிலவற்றை மட்டுமே நாம் எதிர்க்க வேண்டும். சிலவற்றை ஒழித்தே ஆக வேண்டும். டெங்கு, மலேரியா, கொரோனா ஆகியவற்றை எதிர்க்க முடியாது. ஒழிக்க வேண்டும்.

Google News Follow : கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தேசிய அளவில் வைரல்

அதுபோலத் தான் சனாதனத்தை ஒழிப்பதே சரி என்று பேசினார். இதற்கு பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் எதிர்வினையாற்றி வருகின்றன. அதுவும் தேசிய அளவில் விஷயம் விஸ்வரூபம் எடுத்து பல்வேறு தலைவர்களும் எதிர்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த பேச்சு வேறு வகையில் திரித்து வட இந்திய மாநிலங்களில் வைரலாக்கப்பட்டு வருவதாக பேசப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி நிலைப்பாடு

இந்நிலையில் காங்கிரஸ் ஏன் மவுனமாக இருக்கிறது? இந்தியா கூட்டணியின் பதில் என்ன? என்று கேள்வி எழுந்தது. இதுதொடர்பாக இன்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், எங்களின் பார்வை என்பது தெளிவாக இருக்கிறது. ”சர்வ தர்ம சம்பவா” என்ற சித்தாந்தத்தை பின்பற்றி வருகிறோம்.

Google News Follow : கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சமதர்ம சமுதாயம்

அதாவது, ’சமதர்ம சமுதாயம்’ என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. ஒவ்வொரு கட்சிக்கும் கருத்து சொல்ல சுதந்திரம் உண்டு. அனைவரது நம்பிக்கைகளுக்கும் நாங்கள் மரியாதை அளிக்கிறோம் என்று விளக்கம் அளித்தார். இதன்மூலம் உதயநிதி ஸ்டாலின் பேச்சிற்கு ஆதரவு தெரிவிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். அதேசமயம் சனாதனம் முற்றிலும் வேண்டாம் எனவும் கூறவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.