திருப்பதியை நோக்கி நகரும் ஐடி நிறுவனங்கள் – இளைஞர்களுக்கு அடிக்கும் செம ஜாக்பாட்

இந்தியாவில் தொழில்நுட்ப நிறுவனங்கள் என்றாலே பெங்களூரு, ஐதராபாத், சென்னை, டெல்லி போன்ற பெரு நகரங்கள்தான் என சொல்லக்கூடிய நிலைமை இருந்த நிலையில், அது இரண்டாம் கட்ட நகரங்களை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்தியாவில் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு சாதகமான அம்சங்கள் குறித்து நாஸ்காம்- டெலாய்ட் இந்தியா ஆகியவை ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கை மூலமாக இந்த சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது.

2ம் கட்ட நகரங்களை நோக்கி ஐடி நிறுவனங்கள்நாடு முழுவதும் 26 இரண்டாம் கட்ட நகரங்கள் தொழில்நுட்ப நிறுவனங்களின் மையப் பகுதியாக மாறியுள்ளது. 2ம் கட்ட நகரங்களில் சாலை மற்றும் உட்கட்டமைப்புகளில் ஏற்பட்டுள்ள அசுர வளர்ச்சி, நிறுவனங்கள் ஆரம்பிக்க சாதகமான சூழல், மாநில அரசுகளின் உதவி, திறமையான இளம் ஊழியர்கள் காரணமாக இந்த பகுதிகளில் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெருகி வருகின்றன.

எந்தெந்த ஊர்களில் தெரியுமாஇரண்டாம் கட்ட தொழில்நுட்ப நகரங்கள் பட்டியலில் ஆந்திராவின் திருப்பதி, விஜயவாடா, விசாகப்பட்டினம் இடம்பெற்றுள்ளன. ஆந்திராவுக்கு இன்னும் தலைநகர் முடிவு செய்யப்படாத நிலையில், ஐதராபாத் தான் ஆந்திர மாநில ஐடி நிறுவனங்களின் தலையகமாக இருந்தது. இது தற்போது மற்ற நகரங்களுக்கும் விரிவடைந்துள்ளது. இதேபோல தெலங்கானாவின் வராங்கல் பகுதியும் அதில் உள்ளது. இதேபோல மகாராஷ்டிராவின் நாக்பூர், நாசிக், தமிழகத்தின் மதுரை, திருச்சி, கோவை, கேரளாவின் கொச்சி ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
இடம்பெயர என்ன காரணம்பெருநகரங்களை விட இரண்டாம் கட்ட நகரங்களில் கட்டட வாடகை 50 சதவிகிதம் குறைவாக இருப்பதும், திறமையான ஊழியர்களின் ஊதியம் 20 – 30 சதவிகிதம் வரை குறைவாக இருப்பதும், மற்ற செலவுகளும் குறைவு என்பது 2ம் கட்ட நகரங்களை நோக்கி படையெடுக்க முக்கிய காரணம். இந்தியாவிலுள்ள மொத்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் 39 சதவிகிதம் 2ம் கட்ட நகரங்களில்தான் இயங்குகின்றன என்பதும் குறிப்பிடத்தக்க அம்சம்.
வேலைவாய்ப்பு உருவாக்கம்60 சதவிகித பொறியியல், கலை மற்றும் அறிவியல் பட்டதாரிகள் சிறிய நகரங்களில்தான் வசிக்கிறார்கள். திறமையான ஐடி பொறியாளர்களில் 11 முதல் 15 சதவிகிதம் வரை 2ம் மற்றும் 3ம் கட்ட நகர பகுதிகளைச் சேர்ந்தவர்கள்தான். ஆகவே, தொழில்நுட்ப நிறுவனங்கள் இங்கு தொழில் தொடங்குவதால் திறமையான இளம் பட்டதாரிகளுக்கு சொந்த ஊரிலேயே வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது. இவர்களை வேலைக்கு எடுத்து பயிற்சி அளித்து வேலை வாங்கினாலே வளர்ச்சி அடையலாம் என ஐடி நிறுவனங்கள் நினைக்கின்றன.
கொரோனாவுக்கு பின் மாறிய நிலைஇதுகுறித்து டெலாய்ட் இந்தியாவின் பங்குதாரரான சுமித் சல்வான், கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பு ஐடி நிறுவனங்கள் பெரு நகரங்களையே சார்ந்திருந்த நிலையில், தற்போது நிலை மாறி நாடு முழுவதும் பரவலாக இயங்க ஆரம்பித்துவிட்டன. தற்போது 10 – 15 சதவிகிதம் வரை ஐடி நிறுவனங்கள் இரண்டாம் கட்ட நகரங்களில் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.

_குறையும் செலவுகள்நாஸ்காம் பொறுப்பாளர் சுகன்யா ராய், “இரண்டாம் கட்ட நகரங்களில் தொழில்நுட்ப நிறுவனங்களை ஆரம்பிப்பதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. திறமையாள ஊழியர்கள், பெரு நகரங்களை விட பாதியாக செலவு குறைவது, உட்கட்டமைப்பு வசதிகளின் வளர்ச்சி ஆகியவை தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளன” என்று கூறுகிறார். 114 வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் கிளைகளை இந்த 26 நகரங்களில் அமைத்துள்ளன. இந்த தொழில்நுட்ப வளர்ச்சி என்பது பெரும்பாலான வளர்ச்சிக்கு வித்திடும் என்றால் அது மிகையல்ல.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.