Xiaomi 13T Pro 1TB ஸ்டோரேஜ், MediaTek ப்ராசஸர்! இணையத்தில் லீக் ஆன ஸ்பெக்ஸ் முழு விவரங்கள்!

Xiaomi 13T Pro மாடல் செப்டம்பர் 16ம் தேதி வெளியாகலாம் என்று சமீபத்தில் டிப்ஸ்டர்கள் இணையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். 6.67இன்ச் டிஸ்பிளே , MediaTek DM9200+ ப்ராசஸர், 120W சார்ஜிங் வசதி, இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்ட் என பல்வேறு சிறப்பம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இது குறித்து டிப்ஸ்டர்கள் பலரும் இணையத்தில் பகிர்ந்துள்ள தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

​Xiaomi 13T Pro-ல் ப்ராசஸர் மற்றும் ஸ்டோரேஜ்Xiaomi 13T Pro மொபைலில் அதிநவீன MediaTek Dimensity 9200+ ப்ராசஸர் இடம்பெறலாம் என்று டிப்ஸ்டர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதில் , 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் வசதி , 16GBரேம் மற்றும் 1TB ஸ்டோரேஜ், 12GB ரேம் மற்றும் 512GB ஸ்டோரேஜ் வசதி ஆகிய மூன்று வேரியண்ட்டுகள் வெளியாகலாம் என்று தகவல்கள் கசிந்து வருகின்றன.
​கேமரா வசதிகள்Xiaomi 13T Pro-ல் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், பின்புறம் OIS வசதியுடன் கூடிய Sony IMX707 சென்சார் 50 மெகாபிக்ஸல் கேமரா , 13 மெகாபிக்ஸல் Omnivision OV138 அல்ட்ரா வைட் கேமரா, 50 மெகாபிக்ஸல் Omnivision OV138 டெலிபோட்டோ கேமரா ஆகியவை இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்பக்கம், Sony IMX596 சென்சாருடன் கூடிய 20 மெகாபிக்ஸல் செல்ஃபீ கேமரா இடம்பெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
​Xiaomi 13T Pro டிஸ்பிளே6.67 இன்ச் 1.5K OLED டிஸ்பிளே 144Hz ரெஃப்ரஷ் ரேட் 1200p ரெசல்யூஸன் வசதியோடு இடம்பெறலாம் என்று தகவல்கள் கசிந்துள்ளன. இதனுடன் HDR10+ சப்போர்ட் வசதியும் இடம்பெற்றுள்ளது என்று டிப்ஸ்டர்கள் கூறியுள்ளனர்.
​பேட்டரி திறன் மற்றும் நிறங்கள்Xiaomi 13T Proல் 5000mAh திறன்மிக்க பேட்டரி மற்றும் 120W வேகமான சார்ஜிங் வசதி வழங்கப்படலாம். மேலும், இந்த மாடல் கிளாசிக் பிளாக் மற்றும் லைட் ப்ளூ நிறங்களில் வெளியாகலாம் என்றும் டிப்ஸ்டர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.