Samsung Galaxy A54 5G புது கலர் வேரியண்ட் இந்தியாவில் வெளியீடு! ஸ்பெக்ஸ் மற்றும் முழு விவரங்கள்!

Samsung Galaxy A54 5G கடந்த மார்ச் மாதம் Awesome Lime, Awesome Graphite ,மற்றும் Awesome Violet ஆகிய மூன்று நிறங்களில் வெளியானது. இந்நிலையில் ஆறு மாதங்கள் கழித்து புதிய கலர் வேரியண்டில் இந்தியாவில் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மொபைலின் விலை, சிறப்பம்சங்கள் மற்றும் இதர விவரங்களை பார்க்கலாம்.

​Samsung Galaxy A54 5G ப்ராசஸர்Samsung Galaxy A54 5G-ல் Exynos 1380 Octa-core (4×2.4 GHz Cortex-A78 & 4×2.0 GHz Cortex-A55) ப்ராசஸர் இடம்பெற்றுள்ளது. இந்த மொபைல் Android 13, One UI 5.1 அடிப்படையில் இயங்குகிறது.
​Samsung Galaxy A54 5G சார்ஜிங் வசதிSamsung Galaxy A54 5G மொபைல் 5000mAh பேட்டரி இடம்பெற்றுள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தாலே இரண்டு நாளைக்கு இதன் திறன் நீடிக்கும் என்று சாம்சங் நிறுவனம் கூறுகிறது. இது பயனர்களின் பயன்பாட்டை பொறுத்து அமையும்.
​Samsung Galaxy A54 5G டிஸ்பிளேSamsung Galaxy A54 5G -ல் 6.4 இன்ச் full-HD+ Super AMOLED டிஸ்பிளே மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வசதி வழங்கப்பட்டுள்ளது. சூரிய வெளிச்சத்திலும் டிஸ்பிளே நன்றாக விஷன் பூஸ்டரும் வழங்கப்பட்டுள்ளது.
​Samsung Galaxy A54 5G கேமராSamsung Galaxy A54 5G மொபைலில் ட்ரிபிள் ரியர் கேமரா வசதி பொறுத்தப்பட்டுள்ளது. OIS வசதியோடு கூடிய 50 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா, 12 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 5 மெகாபிக்ஸல் மேக்ரோ கேமரா ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும், முன்புறம் 32 மெகாபிக்ஸல் செல்ஃபீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது.
​Samsung Galaxy A54 5G புதிய நிறம் மற்றும் ஸ்டோரேஜ்Samsung Galaxy A54 5G மொபைல் Awesome Lime, Awesome Graphite ,மற்றும் Awesome Violet ஆகிய மூன்று நிறங்களில் ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில் தற்போது 8GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் வேரியண்டில் Awesome White நிறத்தில் வெளியாகியுள்ளது. இந்த மொபைலின் ஸ்டோரேஜை பொறுத்தவரை 8GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் வசதி, 8GB ரேம் +128GB ஸ்டோரேஜ் வசதி ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.
​Samsung Galaxy A54 5G விலைஇரண்டு வேரியண்ட்டுகளில் வெளியாகியுள்ள Samsung Galaxy A54 5G மொபைலின் 8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் 38,999 ரூபாய்க்கும், 8GB ரேம் +256GB ஸ்டோரேஜ் வேரியண்ட் 40,999 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.