Seltos SUV – 2 மாதங்களில் 50,000 முன்பதிவுகளை பெற்ற கியா செல்டோஸ்

இந்தியாவின் பிரபலமான சி-பிரிவு எஸ்யூவிகளில் ஒன்றான கியா செல்டோஸ் முன்பதிவு துவங்கப்பட்ட இரண்டு மாதங்களில் 50,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். கடந்த ஜூலை 14,2023 முதல் முன்பதிவு நடைபெற்று வருகின்றது.

குறிப்பாக பெறப்பட்ட முன்பதிவுகளில் 77 சதவீத முன்பதிவு டாப் செல்டோஸ் HTX வேரியண்ட் பெற்றுள்ளது. ADAS பெற்ற மாடல் 47 சதவீதமும், டீசல் என்ஜின் கொண்ட வேரியண்டுகள் மொத்த முன்பதிவில் 40 சதவீதமாக உள்ளது.

Kia Seltos

மேலும், கியா இந்தியா நடப்பு மாதம் செல்டோஸ் 4,00,000 உள்நாட்டு விற்பனையில் ஒரு மைல்கல்லைப் பதிவுசெய்தது, அதன் தொடக்கத்திலிருந்து ஏற்றுமதிகள் உட்பட மொத்தம் 5,47,000 செல்டோஸ் விற்பனையுடன் சேர்த்து. செல்டோஸ் 2019 இல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து தொடர்ந்து கியா நிறுவனத்தின் சிறந்த விற்பனையாகின்ற காம்பாக்ட் எஸ்யூவியாக இருந்து வருகிறது.

1.5 லிட்டர் GDI டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக குதிரைத்திறன் 160 bhp மற்றும் 253 Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த மாடலில் 6 வேக இன்டலிஜென்ட் மேனுவல் மற்றும் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், அதிகபட்சமாக 113 bhp மற்றும் 144 Nm  டார்க்கை உருவாக்குகிறது. இந்த என்ஜின் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஐவிடி (IVT – Intelligent continuously variable transmission) ஆட்டோ டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இறுதியாக, புதிய 1.5-லிட்டர் VGT டீசல் என்ஜினைப் பொறுத்தவரை, 113 bhp மற்றும் 250 Nm டார்க்கை உருவாக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், 6 ஸ்பீட் இன்டெலிஜென்ட் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6-ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க – கியா செல்டோஸ் எஸ்யூவி ஆன்-ரோடு விலை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.