காணாமல் போன சீன ராணுவ அமைச்சர் டிஸ்மிஸ்| Missing Chinese Defense Minister Dismissed

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

பெய்ஜிங்: காணாமல் போன சீன ராணுவ அமைச்சர் லீ- ஷாங்- பு பதவி நீக்கம் செய்யப்பட்டதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

சீனாவில் கம்யூனிச ஆட்சி நடந்து வருகிறது. ஜி ஜின்பிங் அதிபராக உள்ளார். கடந்த ஜூலை மாதம் சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த குயின் கேங் திடீரென மாயமானார். இதையடுத்து அந்நாட்டின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக வாங் யீ நியமிக்கப்பட்டார். பின்னர் குயின் கேங் பதவி நீக்கம் செய்யப்ப்டடார்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 11-ம் தேதி சீன ராணுவ அமைச்சர் லீ- ஷாங்- பு திடீரென மாயமானார். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. அரசு நிர்வாக விஷயங்களில் இவர் தொடர்ந்து பங்கேற்காமல் இருந்து வந்துள்ளார்.இந்நிலையில் சீன பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டதையடுத்து ராணுவ அமைச்சர் லீஷாங் பு பதவி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper –>

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.