ஐபோன் வசதியை இந்த ரூ. 7 ஆயிரம் மொபைலிலேயே பெறலாம்… லீக்கான தகவல்!

Smartphone: டெக்னோ பாப் 8 (Techno Pop 8) மாடல் ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். இந்த ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் பாப் தொடரில் புதிய மாடலாக இது இருக்கும், இது அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளதை காண முடிகிறது. 

இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இதுமட்டுமின்றி, இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே அதன் விலை குறித்த தகவல்களும் இணையத்தில் வெளியாகி உள்ளன. அந்த வகையில், இதுவரை இந்த மொபைல் குறித்து வெளியாகி உள்ள தகவல்களை இங்கு காணலாம்.  

Techno Pop 8 மொபைலின் சிறப்பம்சங்களை குறித்து பார்த்தால் டெக்னோவின் இந்த மொபைல் 90Hz புதுப்பிப்பு வீத (Refresh Rate) டிஸ்ப்ளேவுடன் வரும். இந்த மொபைல் Android 13 Go பதிப்பில் இயங்கும் என தெரிகிறது. இது தவிர, யுனிசாக் டி606 சிப்செட் இதில் பொருத்தப்பட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த மொபைலில் 13MP பின்பக்க கேமரா மற்றும் 8MP செல்ஃபி கேமரா இருக்கும். போனின் பேட்டரி 5000mAh ஆக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை என்னவாக இருக்கும்?

டெக் தொடர்பான தகவல்களை வெளியிடும் பராஸ் குக்லானி தனது அதிகாரப்பூர்வ X (ட்விட்டர்) பக்கத்தில் Techno Pop 8 ஸ்மார்ட்போனின் விலையை லீக் செய்துள்ளார். அதுகுறித்து Techno நிறுவனத்தின் இந்த மொபைல் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும். 

Tecno Pop 8 launching soon

– Android T GO
– Unisoc T606
-13MP Primary
-8MP Front
-5000 mAh/10W

<₹6999 pic.twitter.com/qHtMBrWmsI

— Paras Guglani (@passionategeekz) October 29, 2023

இவற்றில் 64 GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் + 3 GB RAM + 3 GB Virtual RAM; 64 GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் + 4 GB RAM + 4 GB Virtual RAM மற்றும் 128 GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் + 4 GB RAM + 4 GB Virtual RAM உள்ளிட்ட வேரியண்ட்கள் அடங்கும். இந்த மொபைல் 4 வண்ணங்களில் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த போனின் விலை ரூ.6,999 முதல் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. 

முக்கிய அம்சங்கள்

இந்த மொபைலில் 6.6 இன்ச் HD+ LCD டிஸ்ப்ளே இருக்கும். டிஸ்ப்ளே ரெஸ்சோல்யூஷன் 720 x 1612 பிக்சல்கள் ஆக இருக்கும். போனின் பேட்டரி 5000mAh ஆக இருக்கும், இதன் மூலம் 10W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கிடைக்கும். ஐபோன் போன்ற டைனமிக் ஐலேண்ட் அம்சம் இந்த போனில் வழங்கப்படும், அதில் நோட்டிபிக்கேஷன் காட்டப்படும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.