கோலியை துரத்தும் துரதிருஷ்டம்… மீண்டும் சதம் மிஸ் – மிரட்டும் மதுஷங்கா!

IND vs SL Match Score Update: நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரின் (ICC World Cup 2023) 33ஆவது லீக் போட்டியில், இந்தியா – இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். 

அந்த வகையில், ஓப்பனரும், கேப்டனுமான ரோஹித் சர்மா (Rohit Sharma) 4 ரன்களில் மதுஷங்கா வீசிய முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அதன்பின் 150+ ரன்களுக்கு சுப்மான் கில் – விராட் ஜோடி பார்ட்னர்ஷிப் அமைத்தது. அதில், சுப்மான் கில் (Shubman Gill) 92 பந்துகளில் 11 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 92 ரன்கள் எடுத்து மதுஷங்காவிடம் ஆட்டமிழந்தார். அதேபோல், மதுஷங்காவின் (Dilshan Madushanka) அடுத்த ஓவரில் விராட் கோலி 88 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 94 பந்துகளில் மொத்தம் 11 பவுண்டரிகளை அடித்திருந்தார்.

ஒருநாள் அரங்கில் சச்சினின் (Sachin Tendulkar) அதிக சதத்தை விராட் கோலி (Virat Kohli) சமன் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், துரதிருஷ்டவசமாக இன்றும் சதத்தை பூர்த்தி செய்யாமல் ஆட்டமிழந்தார், விராட் கோலி. சச்சின் மொத்தம் ஒருநாள் போட்டிகளில் 49 சதங்களை பதிவு செய்துள்ளார். விராட் கோலி இதுவரை 48 சதங்களை பூர்த்தி செய்துள்ளார். சச்சின்தான் ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர் என்பதால் அவரின் சாதனையை விராட் கோலி முந்திச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

 runs
deliveries
 fours

Well played, Virat Kohli! #TeamIndia 196/3 #CWC23 | #MenInBlue | #INDvSL pic.twitter.com/gcEO1QhVgv

— BCCI (@BCCI) November 2, 2023

இதில், கடந்த சில நாள்களுக்கு முன் தரம்சாலாவில் நியூசிலாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் 95 ரன்களை எடுத்து விராட் கோலி அவுட்டானார். அதுவும் பெரிய ஏமாற்றமாக அமைந்த நிலையில், இன்றைய போட்டியில் கில்லும், விராட்டும் இலங்கை பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தனர். மேலும், இருவரும் சதத்தை நோக்கி பாய்ந்து போய்கொண்டிருந்த நிலையில், கில் 30ஆவது ஓவரிலும், விராட் கோலி 32ஆவது சதத்தை பூர்த்தி செய்யாமல் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர். 

இந்திய அணி 32 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை எடுத்திருந்தது. ஷ்ரேயாஸ் ஐயர் – கேஎல் ராகுல் களத்தில் உள்ளனர். மதுஷங்கா மொத்த 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இந்தியா நடப்பு தொடரில் முதல்முறையாக 300 ரன்களை தொடும் என எதிர்பார்ப்பு உள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.